பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவின் பொருள் 53 விருப்பக் கருத்தியைபு முறையைக் கையாண்டு நல்ல பலன் கண்டவர் சிக்மண்ட் பிராய்டு; ஆசை நிறைவேற்றத்திற்காகவே கனவுகள் எழுகின்றன வென்று அவர் கூறுகிரு.ர். அவருடைய ஆராய்ச்சி யைப் பெரிதும் போற்றினலும் ஆட்லரும் யுங்கும் அவர் கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. 'கனவு என்ற வாயிலின் வழியாக மனக் கோட்டைக் குள் நடக்கும் நிகழ்ச்சிகளின் மேற்போக்கான காட்சி நமக்குக் கிடைக்கிறது” என்று ஆட்லர் எழுதுகிரு.ர். 'ஒருவனுடைய வாழ்க்கைப் பிரச்சினையையே கனவு காட்டுகிறது” என்பது அவர் கருத்து. உயர்வடைய வேண்டுமென்ற ஒரே நோக்கத் துடன் வாழ்க்கைப் போராட்டம் நிகழ்வதாக ஆட்லர் நம்புகிரு.ர். கனவும் அந்நோக்கத்தை அடையும் முயற்சியை ஓவியம்போலத் தீட்டிக் காண்பிக்கிறது.' யுங் என்பவர் மறை மனத்திற்கு மற்றவர்களைவிட மிக உயர்ந்த இடம் கொடுப்பவர். மனித இனம் அடைந்துள்ள ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சிகளெல்லாம் மறை மனத்தில் பதிந்திருக்கின்றன என்பதும் அம் மறை மனத்திலிருந்தே வெளிமனம் வளர்கிற தென்பதும் அவர் கருத்து. ஆகவே அவர், 'வாழ்க் கையில் ஏற்படும் தடைகள் குறைபாடுகள் முதலிய வற்றிற்கு மறை (மனம் கனவிலே ஈடு செய்ய முயலு கிறது. அவ்வாறு ஈடு செய்வதற்காக உண்டாகும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் புதிர்போல இருக்கின்றன. அவற்றை நிலைமைக்கேற்றவாறு ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்' என்று கூறுகிரு.ர். பிராய்டு. ஆட்லர், யுங் ஆகிய மூவருடைய கருத்துக் களையும் சேர்த்துப் பார்க்கும்போது கனவைப்பற்றி ஒரு பொதுவான விளக்கம் நமக்குக் கிடைக்கும். 4