பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மனமும் அதன் விளக்கமும் பல கனவுகள் தொடர்பில்லாமல் தாறுமாருகவும் வேடிக்கையாகவும் இருப்பதால் கனவிற்கே பொரு ளில்லை என்று நாம் தள்ளிவிடக் கூடாது. 'கனவு நம்முடைய வாழ்க்கையோடு நெருங்கிய தொடர் புடையது; அது குறிப்பாக மன நிலையைக் காட்டுகிற தென்பதை வெகு எளிதில் மெய்ப்பித்துவிடலாம். மறைவாக மனத்துள்ளே வேலை செய்யும் எண்ணங்களை அது காண்பிக்கிறது" என்று மெக்டுகல் என்ற உளவிய லறிஞர் எழுதுகிரு.ர். கனவுகள் நிகழ்கின்ற காலத்திலேயும் மனம் வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆளுல் விழிப்பு நிலையிற் போல அது அவ்வளவு கூர்மையாகவும் தீவிரமாகவும் வேலை செய்வதில்லை. தர்க்க முறைப்படியும் நுட்ப மாகவும் அப்பொழுது எண்ணங்கள் தோன்றுவதில்லை. இவ்வாறு மனம் தனது முழு ஆற்றலுடன் வேலை செய்யாததால் அந் நிலையிலே மறை மனத்தில் அழுத் திக் கிடக்கும் எண்ணங்களும் ஆசைகளும் கனவாக வெளிப்படுகின்றன. ஆதலினல்தான் கனவுகளும் தாறுமாருக இருக்கின்றன. வாழ்க்கையில் நிறைவேருத பல ஆசைகள் கனவில் நிறைவேறுகின்றன என்று கண்டோம். கனவிலே ஒரு இது வேளைகளில் எதிர்காலத்தில் நடைபெறப் போவதும் தோன்றுவதுண்டு. இறந்த கால அனுபவக் களைக் கொண்டிருப்பதோடு ஒரளவிற்கு எதிர்கால அனுபவங்களின் தோற்றத்தைக் காணும் திறமையும் மனத்திற்கு உண்டு. உலகப் போக்கையும் தனி மனித வாழ்க்கைப் போக்கையும் கவனித்தால் அவ للاسg} 65)L னுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சிறிது உணர முடியும். மேலும் மனத்துள் எழுந்துள்ள எண்ணங் களின்படியும் விருப்பங்களின்படியுமே எதிர்காலத்தில்