பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவின் பொருள் 55 செயல்களின் போக்கு அமைகின்றன. ஆதலால் அவை கனவில் எப்பொழுதாவது தோன்றுவதில் அற்புத மொன்றுமில்லை. இதைக்கொண்டு எல்லாக் கனவுகளும் மெய்யாகுமென்று எண்ணிவிடக் கூடாது. கனவைப் பற்றிய உண்மையை அறிந்த பின்னும் அவ்வாறு தவருக எண்ணமாட்டோ மல்லவா? ஒவ்வொரு கனவையும் ஆராய்ந்து அதன் பொருளே அறியலாம். அதற்கு முக்கியமாகக் கனவு காண்பவ னுடைய ஒத்துழைப்பு வேண்டும். மனத்திற்குள்ளேயே மறைத்து வைத்துள்ள செய்திகளையும் மனத்தில் உதிக்கிற எண்ணங்களையும் வெளிப்படையாகக் கூற அவன் வரவேண்டும். இல்லாவிட்டால் உண்மையை அறிவது பெரும்பாலும் முடியாது. அவ்வாறு வெளிப் படையாகக் கூறிய காலத்திலும் சில வேளைகளில் கனவின் பொருளை அறிய முடியாமற் போகலாம். அல்லது கனவிற்கு வேறு வகையான பொருள் கூறவும் இடமிருக்கலாம். 'கனவின் பொருளை முழுமையாக அறிந்துவிட்டதாக யாரும் அறுதியிட்டுச் சொல்ல இயலாது. அதற்குக் கண்ட பொருளானது சரியானதே என்று தோன்றக் கூடியதாக இருக்கின்ற நிலையிலும் அதற்கு வேறு பொருளொன்று இருக்க முடியும்' என்று பிராய்டு கூறுகிருர் ஆட்லரும் யுங்கும் இக் கருத்தை ஒப்புக்கொள்ளுகிருர்கள். ஆதலால் கனவுகளை ஆரா யும்போது இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கனவென்பது பொருளற்ற தோற்றமல்ல. மனநிலையை ஒரு வேடிக்கையான முறையில் தீட்டிக் காண்பிக்கும் நிகழ்ச்சி அது. அவன் உண்மையை ஆராய்ந்து கண்ட பெருமை முக்கியமாக மனப் பகுப்பியலாரையே சாரும்.