பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகற் கனவு உறங்கும்போது காண்பது கனவு. விழித்திருக் கின்ற நிலையிலும் கனவு காண்பதுண்டு. அது பகற் கனவு. பகற் கனவு என்றவுடன் பகலிலே உறங்கும் போது காணும் கனவு என்று கருதிவிடக் கூடாது. நன்ருக விழித்திருக்கும்போதே எழுகின்ற மனக் கோட்டைக்குத்தான் அப்பெயர் வழங்குகிறது. காலம் பகலாகவும் இருக்கலாம். இரவாகவும் இருக்கலாம். உறக்க நிலையிலே தோன்றுவது கனவு; விழிப்பு நிலையிலே தோன்றுவது பகற் கனவு. கனவு காணுதவர்களே பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். பகற் கனவு காணுதவர்களும் வெகு அருமை. மக்கள் கூட்டத்தையே இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். பகற் கனவு காண் பவர் ஒரு பிரிவு செயலிலே ஈடுபடுகின்றவர் மற்ருெரு பிரிவு. ஆனல், பகற் கனவு காண்பவன் செயலிலேயே இறங்கமாட்டான் என்பதில்லை. அதுபோலவே செயல் புரிகின்றவன் பகற் கனவு, காண மாட்டான் என்ப தில்லை. பகற் கனவில் மிகுதியாகக் காலத்தைச் செல விடுபவர்கள் ஒரு பகுதி; செயல் புரிவதில் மிகுதியாகக் காலத்தைச் செலவிடுபவர்கள் மற்ருெரு பகுதி. பகற் கனவு வேறு: சிந்தனை வேறு. பகற் கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண் ணங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொள்ளுகிருன். ஆளுல் சிந்தனை செய்பவன் அப்படியில்லை. ஒரு குறிப் பிட்ட பிரச்சினையைப் பற்றியோ ஒரு சூழ்நிலையில் எவ்