பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகற் கனவு 67 னுடைய மன நிலையைக் காண இது கனவைவிடச் சிறப் பாகப் பயன்படும். ஆனல் பகற்கனவை வெளிப் படையாகக் கூறும்படி செய்வதுதான் பெரும்பாலும் இயலாது. அது இழிந்ததாக இருக்குமானல் வெளியில் கூறப் பொதுவாக யாரும் விரும்பமாட்டார்கள். கனவின் பொருளை அறிந்துகொள்ளவிருப்பக் கருத் தியைபு முறையைக் கையாளுவதைப் பற்றி முன்பே தெரிந்துகொண்டோம். அ ந் த ஆராய்ச்சியோடு ஒருவன் காணும் பகற்கனவையும் சேர்த்து நோக்கினல் அவனுடைய மன நிலைமையை நன்ருக உணர முடியும்.