பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலி t;3 'கார்காலத்திலே எங்கள் ஊரில் இப்படி இடி யிடிப்பதுண்டு. ஆனல் எங்கேயாவது இடி விழுந்த தாகவே காணுேம். சும்மா வெறும் உருட்டலும் முழக்கமும்தான்’ என்று மெதுவாக நான் கூறினேன். என் பேச்சு அவருடைய உள்ளத்திலே அமைதியை உண்டாக்கவில்லை, வீண் அச்சங்கொண்டு அவர் தொல்லைபட்டுக் கொண்டிருந்தார். 'எனக்கென் னவோ இடியிடிப்பதைக் கேட்டால் ஒரே பயமாக இருக்கிறது" என்று அவர் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டே கூறினர். அந்த அச்சத்திற்கு அவரால் ஒரு காரணமும் கூற முடியவில்லை; "என்னவோ அச்சமாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டுச் சுருண்டு படுத்துக்கொண்டார். விரிப்பை எடுத்துப் போர்த்துக் கொள்ளவும் செய்தார். "இப்படி இழுத்துப் போர்த்துக்கொண்டால் இடி விழாதோ?’ என்று கேலியாகக் கேட்டேன். அவர் பதில் பேசவேயில்லை. இவரைப் போல வீண் அச்சங்கொள்கின்றவர்கள் பலருண்டு. சிலருக்குப் பூனையைக் கண்டால் ஒரே நடுக்கம். சிலருக்கு இருட்டைக் கண்டால் ஒரே நடுக்கம்; கோழியைக் கண்டு அலறி ஒடுபவர்களும் உண்டு. ஏன் அவ்வாறு அச்சங் கொள்ளுகிரு.ர்கள் என்று கேட்டால் காரணம் அவர்களுக்கே தெரியாது. சொல்லமுடியாத பேரச்சம் ஏனே உண்டாகிறது. சிங்கத்தையோ புலியையோ கண்டால் பொது வாக அனைவருக்கும் அச்சம் உண்டாகும். அவை கொடியவை என்ற காரணத்தினல் அஞ்சுகிருேம். அதை நாம் புரிந்துகொள்ள முடியும். அது தற்காப்பு உணர்ச்சியால் பிறக்கிறது. ஆனால், கோழியைக் கண்