பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மனமும் அதன் விளக்கமும் பலவகைப்பட்ட கி லி க ள ா ல் பீடிக்கப்பட்டிருக் கின்றனர். அவ்வாறு கிலி பிடித்து இடர்ப்படுவது முட்டாள் தனம் என்று கூறுவதாலும் அக் கிலிக்கு ஒரு காரண மும் இல்லையென்று எடுத்துக் காட்டுவதாலும் அதைப் போக்கிவிட முடியாது. இருட்டறையைக் கண்டு கிலி அடைபவனை அதற்குள்ளேயே வலுக்கட்டாயமாக இருக்கச் செய்து அதில் ஒரு தீங்கும் இல்லையெனக் காண்பித்து அக் கிலியைப் போக்கலாமெனச் சிலர் முயல்கின்றனர். அவ்வாறு செய்வதால் கிலி மறை வதே இல்லை. அக் கிலியைப் போக்குவதற்கு ஒரே ஒரு வழிதா னுண்டு. பொதுவாகக் கிலி பிடிப்பதற்கு இளமையில் நடந்த ஏதாவது ஒரு நிகழ்ச்சியோ அனுபவமோ காரணமாக இருக்குமென்று முன்பே கூறினேன். அந் நிகழ்ச்சியையும் நிலைமையையும், அனுபவத்தையும் மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும்படி செய்ய வேண்டும். மறைமனத்திலே அழுந்திக் கிடக்கும் அனுபவம் வாய்ந்த உளவியலறிஞரின் உதவியால் அவற்றை நனவு மனத்திற்குக் கொண்டுவந்து விடலாம். அவ்வாறு கொண்டு வந்து அன்றடைந்த உள்ளக் கிளர்ச்சியைத் திரும்பவும் உணரும்படி செய்து விட்டால் அக் கிலி தானகவே நீங்கிவிடும். கிலியென் பது காரணமின்றி ஏற்படும் ஒரு பேரச்சம். பொது வாக அது ஒரு ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சியால் உண் டாவது. அதைப் போக்குவதற்கு மனநோய் சிகிச்சை வல்லுனர்களே தகுதி வாய்ந்தவர்கள்.