பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மனமும் அதன் விளக்கமும் கிறது. அதற்குத்தான் இயல்பூக்கம் (lnstinct) என்று பெயர். வழங்குகின்றது. உணவு தேடுக்கம், கூடி வாழுக்கம், இடம் பெயருக்கம், கலவியூக்கம் என்றிப் படிப் பலஇயல்பூக்கங்கள் இருப்பதாக மெக்டுகல் போன்ற உளவியலறிஞர்கள் குறிப்பிடுகிருர்கள். ஒவவொரு இயல்பூக்கத்திற்கும் ஏற்றவாறு உள்ளக் கிளர்ச்சிகளும் உண்டு என்று கூறுவர். இயல்பூக்கத்தைப்பற்றி மாறுபட்ட கருத்துக் களுண்டு. இயல்பூக்கம் என்பதே இல்லை என்பாரும் உளர். இயல்பூக்கம் இருந்தாலும் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் முதலியவற்றிடம் அதன் ஆதிக்கத்தைக் காணலாம்: மனிதனிடத்தில் அதற்கு ஆதிக்கமில்லை என்று கூறுகிறவர்களும் இருக்கிருர்கள். இயல்பூக்கமே இல்லையென்று மறுக்கிறவர்கள் தமது ஆராய்ச்சிகளினல் இயல்பூக்கச் செயலாக எண்ணிவந்த சில செயல்களின் காரணத்தைக் கண்டு பிடித்து அச்செயல்கள் சாதாரணமான அனுபவத்தால் அல்லது அறிவினல் ஏற்பட்ட நடத்தை என்று கூறு கிரு.ர்கள். கும்மென்று இருண்டு கிடக்கும் குகையினுள்ளே வெளவால் தாராளமாகப் பறந்து வட்டமிடுகிறது. நீட்டிக்கொண்டிருக்கும் கரடுமுரடான கற்களின் மேலே அது மோதிக்கொள்வதே இல்லை. ஒருவேளை இருட் டிலே அதற்குக் கண் நன்ருகத் தெரியுமோ என்று சந்தேகித்து அதன் கண்களே மூடிக் கட்டிப் பறக்க விட்டார்கள். அப்பொழுதும் அது எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் இரு ண் ட குகைக்குள்ளே தாராளமாக வட்டமிட்டது! இதை இயல்பூக்கச் செயல் என்று முதலில் நம்பிக்கொண்டிருந்தார்கள்,