பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றுக் கொடுத்தது யார்? 69 1940-ஆம் ஆண்டிலே டொனல்டு கிரிப்பின், ராபர்ட் கலம்பாஸ் என்ற இரண்டு உயிரியலறிஞர்கள் இந்த அற்புதச் செயலின் உண்மையைக் கண்டு பிடித்தார் கள். கண்களை மூடிவிட்டாலும் இருட்டிறையிலே வெளவால் எதன் மேலும் மோதிக்கொள்ளாமல் பறக் கிறது. ஆனல் அதன் காதுகளே முடிவிட்டால் கண்கள் திறந்திருந்தாலும் அது இருட்டில் பறக்கும்போது பல இடங்களில் மோதிக்கொள்கிறது! இந்த ஆராய்ச்சியி லிருந்து ஒர் உண்மை தெரிய வந்தது. வெளவாலுக்கு நுட்பமான ஒலியைக் கேட்டு அறிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. அதனால் அது பறக்கும்போது உண் டாகும் நுட்ப ஒலிகள் எதிரிலுள்ள தடைகளின் மேல் பட்டுத் திரும்பிப் பிரதிபலித்து வரும்போது அவற் றைச் சற்றுத் தொலைவிலேயே உணர்ந்து தடைகளே விட்டு விலகித் தப்பிச் செல்கின்றது. இங்கே இயல் பூக்கச் செயல் ஒன்றும் இல்லை என்று அவர்கள் கண்டார்கள். ஆனல் எல்லா இயல்பூக்கங்களையும் இவவாறு ஆராய்ந்து அவற்றிற்குக் காரணங் கூறுவது கடினம். அத்தனை பெரிய ஆராய்ச்சியிலே நாம் ஈடுபட வேண் டியதுமில்லை. இயல்பூக்கங்களைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்துகொள்வதோடு அவை மனிதனுடைய செயல் களே எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் தெரிந்து கொண்டால் போதும். இயல்பூக்கம் என்பது முன் அனுபவம் இல்லாமல் இயல்பாகவே செய்யப்படும் காரியமாகும். கன்று பாலூட்ட முன்பே கற்றுக்கொள்ளவில்லை. இயல்பூக்க மாகக் கன்று அதைச் செய்கிறது. யாரும் கற்றுக் கொடுக்காமல் குளவி கூடு கட்டி அதில் புழுவை வைத்து முட்டையிடுகின்றது. இவ்வாறு ஒரு பிராணியின் 5 ,م -