பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மனமும் அதன் விளக்கமும் நலத்திற்கும், அதன் இனத்தை அழிந்து போகாமல் பாதுகாப்பதற்கும் இயல்பூக்கச் செயல் உதவுகிறது. ஒரே இன்த்தைச் சேர்ந்த எல்லாப் பிராணிகளும் ஒரே வகையான இயல்பூக்கச் செயல்களைக் கொண்டிருக் கின்றன. தூக்கணங்குருவிகளில் ஒன்று கூடு கட்டுவது போலவே மற்றத் தூக்கணங்குருவிகளும் கூடு கட்டு கின்றன. இயல்பூக்கத்தின் மற்ருெரு தன்மை என்ன வென்ருல் அனுபவத்தால் பழக்கத்திற்கு வரும் செயல் களுக்கு அது முதலில் தூண்டுகோலாக இருக்கிறது. விலங்குகள் இயல்பூக்க நிலையிலே பல செயல்களைச் செய்கின்றன. மனிதனும் குழந்தைப் பருவத்தில் அவ் வாறே செய்கிருன். ஆனல் அவன் முதிர்ச்சியடைய அடைய அறிவாலும் அனுபவத்தாலும் இயல்பூக்கச் செயல்கள் மாறுதலடைகின்றன. மனிதனுடைய சிந்தனையால் மாறுதலடையாத இயல்பூக்கச் செயல் களும் குறைந்துவிடும். கலவியூக்கம் மிக வலிமையுடையதுதான். ஆனல் மனிதன் விலங்குபோல நடந்துகொள்ளலாமா? அந்த இயல்பூக்கம் பண் புள்ள மனிதனிடத்தே தொழிற்படும் போது அதிலே ஒரு கட்டுப்பாடு வளர்ந்துள்ளது. அதை அவன் மீறினல் சமூகம் அவனைப் போற்ருது. இயல்பூக்கங்களை ஒடுக்கி அழிக்க முயல்வது வெற்றி பெருது. ஆனல் விரும்பத்தகாத இயல்பூக்கங்களை வேறு நல்ல துறைகளில் செல்லும்படியாக மாற்றி விடலாம். எப்படி மாற்றுவது? அது முடியுமா? முடியும். போரிடும் இயல்பூக்கம் மனித இனத்துக்கு உண்டு என்பார்கள். அந்த இயல்பூக்கத்தால் மிகுதியாக உந்தப்பட்டு ஒருவன் தனது தோழர்களுடனேயே