பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றுக் கொடுத்தது யார்? 71 சண்டையிடலாம். அதை மாற்றி அவன் தன் நாட்டிற் காகப் போரிடும்படி செய்யலாம். அல்லது மனித இனத்தைப் பீடிக்கும் கொசு போன்றவற்றை ஒழிக்க அவன் முன் வரலாம். இவ்வாறு இயல்பூக்கத்தை மாற்றிவிடுவதற்கு உயர்மடை மாற்றம் (Sublimation) என்று பெயர். இயல்பூக்கத்தோடு தொடர்புடைய உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றி அடுத்த பகுதியில் விவரிக்கும் போது இந்த உயர் மடைமாற்றத்தைப் பற்றி மேலும் ஆராய்வோம்.