பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளக் கிளர்ச்சி 73 ரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கை யிலே அது முறையாகுமா? வேகம் வேகமாக ஒருவன் ரெயில் வண்டிக்குள்ளே நுழைகிருன். செருப்புக் காலால் உனது கால் விரலை நன்முக மிதித்துவிடுகிருன். வலி பொறுக்க முடியாமல் உனக்குக் கோபம் பொங்கி வருகிறது. வந்தவன் கன்னத்திலே அறையலாம் என்றுகூடத் தோன்று கிறது. உடனே அடித்து விடலாமா? அல்லது வாயில் வந்தபடி யெல்லாம் அவனைப் பேசத் தான் செய்ய 60m in fr? ஒரு நாடு மற்ருெரு நாட்டிற்கு ஏதோ ஒரு தவறு செய்துவிடுகிறது. அதற்காக உடனே போர் தொடுத்து விடலாமா? காமம் குரோதம் பொருமை இப்படி எத்தனையோ உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன. அவற்றிற்கெல் லாம் ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால் சமூக வாழ்க்கையே நிலைகுலைந்து போகும். மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் பலவற்றைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் விலங்குகளைப்போல நடக்க முடியாது. சில விலங்குகள்கூட ஒரளவு தமது உள்ளக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ளுகின்றன என்று தோன்றுகிறது. மனிதன் அவற்றைவிடத் தாழ்வாக நடக்க முடியாது. அவனுடைய நாகரிகம், அவனுடைய பண்பாடு அவற்றின் பெருமையெல்லாம் அழியா திருக்க வேண்டுமானல், சமூக வாழ்க்கை நிலைக்க வேண்டுமானுல் மனிதன் தனது இழிந்த கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.