பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மனமும் அதன் விளக்கமும் உண்டுபண்ணிக் கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். நல்ல பழக்கங்களைத் தொடக்கத்திலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் நமது பழக்கங்களே நமக்குத் தீமையாக முடிந்துவிடும். ஆகவே, மனிதன் இயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும், பழக்கத்தாலும், எண்ணித் துணிவ தாலும் மிகப் பல செயல்களைப் புரிகிருன் என்று ஏற் படுகிறது. மறிவினையாகவும் சிலவற்றைச் செய்கிரு ன். சில செயல்கள் பழக்கத்தின் வலிமையால் மறிவினை போலவே அமைந்து விடுகின்றன. ஒடும்போது கால் இடறி ஒருவன் கீழே விழுகிரு ன். அவனுடைய மார்புக் கூடோ, தலையோ தரையில் மோதாதபடி கை முதலில் தரையில் ஊன்றித் தடுத்துக்கொள்ளுகிறது. கையைத் தரையில் ஊன்றி மற்ற உறுப்புக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கையை நாம் ஊன்றுவதில்லை. இளம் வயதிலிருந்து ஏற்பட்ட பழக் கத்தின் வலிமையால் மறிவினை போலவே இது நடை பெறுகிறது. இதை அரை மறிவினை' என்று சிலர் சொல்வார்கள். மேலே கூறியவற்றிலிருந்து மனிதனுடைய செயல் களுக்கு அவனுடைய மனம், எந்த அளவுக்குக் காரண மாக இருக்கிறதென்று தெரிகிறது. மறிவினைச் செயல் களைக்கூட மனத்தின் சிந்தனை வலிமையால் ஒரளவு மாற்றியமைக்க முடியும். மனத்தின் வலிமையால் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். இயல் பூக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் உயர்மடைமாற்றம் பெற்றுச் சிறப்பாக அமையுமாறு செய்யலாம். அவ் வாறு செய்வதால் மனிதனுடைய வாழ்க்கை உயர் வடைகின்றது.