பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மனமும் அதன் விளக்கமும் னுடைய வாழ்க்கையிலே ஏற்படும் விளைவு ஒன்றுதான். இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளுக்கு ஆட்பட்ட மனிதன் வீழ்ச்சியடைகிருன் அ வ ற் றி ற் கு ஆட்படாமல் அவற்றை உயர் மடைமாற்றம் செய்து கொண்டவன் உயர்வடைகிருன். இந்த உண்மையைத்தான் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அறிவு, பகுத்தறிவு என்றெல்லாம் நாம் பேசு கிருேம். ஆனல் உள்ளக் கிளர்ச்சிகளே ஒருவனுடைய செயல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. நல்ல பழக்கங்களையும், பற்றுதல்களையும், குறிக்கோள் களையும் உண்டாக்கிக் கொள்வதாலும், மனத்திட்பத் தாலும் ஒருவன் தனது உள்ளக் கிளர்ச்சிகளை நல்வழிப் படுத்திக்கொள்ள முடியுமானல் அவன் மேம்பாட டையலாம். மனச்சான்றும் அறிவும் இம் முயற்சியிலே அவனுக்குத் துணையாக நிற்க வேண்டும்.