பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனவசியம் ஆஸ்திரியா நாட்டின் தலைநகராகிய வியன்ன நகரத்தில் மெஸ்மர் என்ற புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் நோயாளி ஒருவ ருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது ஒர் அதிசயம் நடந்தது. அவர் நோயாளியை உறக்கத்தில் ஆழ்ந்து போகும்படி செய்துவிட்டார். இதைவிட அதிசயமென்ன வென்ரு ல் அந்த உறக்க நிலையிலேயே நோயாளி தமக்கு மருத்துவர் இட்ட கட்டளைகளே யெல்லாம் செய்தார்! உறக்க நிலையிலேயே பேசவும் செய்தார்! டாக்டர் மெஸ்மர் வேறு சில நோயாளிகளையும் இவ்வாறு உறக்க நிலையில் ஆழ்த்த முயன்ருர். அவருக்கு வெற்றியே கிடைத்தது. இவ்வாறு உறங்கச் செய்து அந்த உறக்க நிலையிலேயே உடல் நலத்திற்காக நோயாளிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிருரோ அவற்றை விழித்த பிறகும் நோயாளி கள் மிக அக்கறையோடு செய்தார்கள். விழித்து எழுந்த உடனேயே நோயாளிகள் தங்களுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். டாக்டர் மெஸ்மர் தம் கைவிரல் நுனிகளின் மூலம் ஏதோ ஒருவகையான காந்த திரவம் போன்ற சக்தி செல்லுவதாகவும் அதேைலயே நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் நம்பினர். இந்த மன வசியமானது மெஸ்மரிசம் என்று அவர் பெயராலேயே வழங்கலாயிற்று.