பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனவசியம் 83 செய்யப்படுபவர் உறங்கிவிடுவார். மீண்டும் விழித் துக்கொள் என்று கூறும் வரையில் இந்த உறக்கநிலை நீடித்திருக்கும். இந்த நிலையிலே மனவசியம் செய்பவர் கட்டளையிட்டவாறெல்லாம் வசியம் செய்யப்படுபவர் செய்வார்; ஆனல் அவரை எதுவேண்டுமானலும் செய்யும்படி தூண்ட இயலாது. வசியம் செய்யப்படுப வருக்கு விருப்பமில்லாத செயலைச் செய்யும்படி அவரை ஏவ முடியாது. அவருடைய கொள்கைகளுக்கும், ஒழுக்கத்திற்கும் மாறுபட்ட எதையும் வசிய நிலையில் கூடச் செய்ய அவர் உடன்படமாட்டார். ஒருவர் புலால் உண்பதை வெறுப்பவராக இருக்கலாம். அவரைப் புலால் உண்ணும்படி வசிய நிலையிலேகூடச் செய்ய முடியாது. ஆனல் புலால் உணவை இரகசிய மாகச் சாப்பிடுபவர் புலாலே உண்ணுமாறு கட்டளை இடப்பட்டால் அவர் அதைச் செய்வார். கொள் கைக்கு மாருன கட்டளை இடப்பட்டால் மனவசியம் உறக்கம் கலைந்துபோகும். மனவசியத்திற்கு இப்பொழுது மெஸ்மரிசம் என்ற பெயரைவிட ஹீப்ட்ைடிசம் என்ற பெயர்தான் அதிகமாக வழங்குகிறது. ஹிப்ளுஸ் என்ற கிரேக்கச் சொல்லிற்கு உறக்கம் என்பது பொருள். அந்தச் சொல்லைக் கொண்டு இம்முறைக்கு ஹிப்ளுட்டிசம் என்ற பெயரை டாக்டர் பிரெய்டு கொடுத்தார். இந்த மனவசிய நிலையைப்பற்றிச் சிறிது ஆராய் வோம். மனம் என்பதில் நனவு மனம், நனவிலி மனம் என்பதாக இரண்டு பகுதிகள் இருப்பதை நாம் முன்பே அறிவோம். நனவு மனத்தைவிட நனவிலி மனம்தான் பெரிதும் ஆற்றல் கொண்டது என்பதையும் நாம் அறிவோம். விழித்திருக்கும் நிலையில் நாம் நனவு மனத்தையே பெரிதும் பயன்படுத்துகிருேம். ஆளுல்