பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனவசியம் 85 பேசலாம்; விழிப்பு நிலையிலே இருப்பதைப் போலவே வேறு செயல்களையும் செய்யலாம். மனவசிய நிலையிலே ஒருவனுடைய பொறிகளின் ஆற்றல்களைக் குறைக்கவும் கூடும்; கூர்மைப்படுத்தவும் கூடும். அந்த நிலையிலே அவர் உடலில் ஏற்பட்டுள்ள மிகுந்த வலியையும் அவர் உணரமாட்டார். கசப்பான பண்டத்தை மிகவும் இனிப்பானதென்று கூறிக் கொடுத்தால் அப்பண்டம் இனிப்பதாகவே எண்ணி அவர் சுவைத்து உண்பார். அருவருக்கத் தக்க கெட்ட நாற்றத்தையும் நறுமணம் என்று கூறி முகரச் சொன்னல் அவ்வாறே முகர்ந்து மகிழ்வார். மனவசியத்தால் நமது ஐம்புலன்களின் கூர்மையை மிகுதிப்படுத்தலாம். இதற்கும் ஒரு எல்லே உண்டென் முலும் நோயைக் குணப்படுத்தவும், தவருண எண்ணங் களை நீக்கவும் இது கையாளப்படுவதுண்டு. மனவசிய நிலையில் நோய் குணமாகிவிட்டது என்ற கருத்தைக் கொடுப்பதன் மூலம் நோயைக் குணமாக்கலாம். ஆயி னும் நோய்களைக் குணப்படுத்த இதை யாரும் இன்று பெரிதும் பயன்படுத்துவதில்லை. நோய்க்கு அடிப் படையான காரணத்தைக் கண்டுபிடித்து அந்நோயைக் களைய முயல்வதே விஞ்ஞான முறைச் சிகிச்சையாகு மென்பது இன்றைய கருத்தாகும். நரம்புக் கோளாறு களையும், உறக்கமின்மையையும், திக்கிப் பேசுதலையும் நகத்தைக் கடித்துக்கொண்டே இருத்தலையும், இன்னும் இவை போன்ற பலவற்றையும் குணப்படுத்துதற்கு மேல்நாடுகளில் இம்முறை பயன்பட்டு வருகிறது. எமிலி கூவே என்னும் பிரான்சு நாட்டு உளவிய லார், "ஒருவன் தன்னைத்தானே வசியம் செய்து கொண்டு நோயையும், உள்ளச் சோர்வையும் நீக்கிக் கொள்ளலாம்" என்று காட்டியுள்ளார். இவ்வாறு 6