பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மனமும் அதன் விளக்கமும் தனக்குத்தானே கருத்தேற்றிக்கொள்ளப் பழகிக் கொண்டால் அதனல் சிறந்த நன்மைகள் விளையும் என்பது அவருடைய எண்ணமாகும். மனவசியம் புதிதான முறையல்ல. நமது நாட்டில் யோகிகள் இதைக் கையாளுகிரு.ர்கள். பாரசீக ஞானி களுக்கும் மற்றவர்களுக்கும் இது தெரிந்திருந்தது. இக்காலத்தில் விளம்பரம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் மக்களின் மனத்தை வசியப்படுத்தக் கூடிய அழகிய படங்களோடு ஒரு பொருளே விளம்பரம் செய்து தங்கள் வாணிகத்தைப் பெருக்கிக்கொள் கிரு.ர்கள். பதவியிலிருப்பவர்கள் தங்கள் அதிகாரக் கட்டளைகளால் பிறரைப் பணிந்து நடக்குமாறு செய்து விடுகிரு.ர்கள். இவைபோன்ற பலவும் மனவசியத்தின் பல கிளைகளாகும். உளவியல் உண்மைகளை அறிந்துகொள்வதற்கும் மனவசியம் பயன்படுகிறது. மனவசிய உறக்கத்தின் போது நினைவு ஆற்றல் மிகுந்திருப்பதாலும் நனவிலி உளத்தின் ஆதிக்கம் ஓங்குவதாலும் அதிலே அழுந்தி யிருக்கும் எண்ணங்களையும், இச்சைகளையும் அறிந்து கொள்வதற்கு இது ஒரு வழியாகப் பயன்படுகிறது. இந்த வழியில் ஒருசின் குறைபாடுகள் உண்டு. ஆளுல் அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுவதில்லை. மனவசியம் என்பது மனத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் இச்சைகளை அறிந்துகொள்ள உதவும் என்பதை அறிந்துகொள்வதே இங்கு முக்கியமாகும்.