பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மனமும் அதன் விளக்கமும் உலகப் புகழ்வாய்ந்த கலைஞர்களும் தங்களுடைய பழையவுாழ்க்கையிலே சலிப்படைந்து இந்தத் தியான நிலையத்தை நாடுகிரு.ர்கள் என்ருல் தியானத்தின் பெருமையை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். ஆட்லரும், யுங்கும் பிராய்டின் கருத்துகளே முற்றிலும் ஏற்க மறுத்துத் தனித்தனியே பிரிந்து விட்டார்கள் என்பதைக் கண்டோம். பொதுவாகப் பார்க்குமிடத்து பிராய்டின் கருத்தே பெரியதோர் அளவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் யுங்கின் கொள்கையானது மேல்நாட்டு உலோகாயுதக் கொள்கைக்கும், கீழ்நாட்டு ஆன்மிகக் கொள்கைக்கும் பாலம் அமைத்து இரண்டையும் பிணைத்து இரண்டும் மனிதனுடைய முழுமையான வாழ்விற்குத் தேவை யானவையே என்று காட்டுவதாக அமைந்துள்ளது. ஆட்லரின் கொள்கை மிக எளிமையானது; சிக்க லற்றது; எல்லாருக்கும் எளிதில் புரியக் கூடியது. அதனால் பலர் அதை வரவேற்ருர்கள். அதனலும் பல நன்மைகள் உண்டாயின. யுங்கின் கொள்கை மதப் பற்றுடையவர்களுக்கு உகந்ததாகப்பட்டது. பொது வாக இக்காலத்தில் இரண்டுமே மனப் பகுப்பியலை மேலும் விளக்க உதவின. புங்கின் கொள்கை, மனத் தைப் பற்றி அறிய மனத்தின் ஆழத்திற்குள்ளே முழுகிப் பார்க்க உதவி செய்கின்றது என்று கூறலாம்.