பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன நலம் உடலை எவ்வாறு நலமாக வைத்திருக்க வேண்டுமோ அது போலவே மனத்தையும் நலம் குறை யாமல் வைத்திருப்பது வாழ்க்கையின் இன்பத்திற்கும், வெற்றிக்கும் அடிப்படையாகும். மனத்தின் பல விந்தைகளை இதுவரையில் சுருக்கமாக அறிந்து கொண்டோம். அம் மனத்தை எவ்வாறு நலம் செழித்து ஓங்கச் செய்யலாம் என்பது பற்றியும் ஒரளவு முன்பே கூறப்பட்டுள்ளது. இப்பகுதியிலே மேலும் சில வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம். பல வழிகளிலே மனநலம் பாதிக்கப்படலாம். அவற்றை அறுதியிட்டுக் கூறுவது எளிதல்ல. உடல் நலக்குறைவே மனநலத்தைக் கெடுக்கக்கூடியதாக இருக்கலாம். வீட்டுச் சூழ்நிலை, பள்ளி, கோவில், நீதி மன்றம், தொழில் தி லை ைம என்று இப்படி மிகப் பலவற்றை நாம் எடுத்துக் கூறலாம். ஆதலால் மனநலமானது, உடலியல், பொருளியல், சமூகவியல், சமயம், அறவியல் முதலான பல துறைகளோடு நெருங்கிய தொடர்புடையதாகும். மேலும் மனநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்க் கைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக்கும். ஒரு மனிதனுக்கு ஏற்றது மற்ருெரு மனிதனுக்கு ஒத்ததாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுருக்க மாகக் கூறினல் ஒவ்வொருவனுக்கும் ஏற்பட்டுள்ள அவ னுடைய ஆளுமையின் வளர்ச்சியைப் பொறுத்ததாக மனநலம் இருக்கும்.