பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மனமும் அதன் விளக்கமும் பொதுவாகத் துன்பம் நேர்வதால் மனநலம் பாதிக்கப்படும் என்பதை யாவரும் உணர்ந்திருப் பார்கள். துன்பம் எத்தனையோ விதங்களில் நேரலாம். பொருளாதார நெருக்கடி, தொழிலில் பெருந் தோல்வி, உடல் நோய், வேலையில்லாமை, பெருங் குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு என்றிவ்வாறு எண்ணற்ற விதங்களில் துன்பம் உண்டாகலாம். இத்துன்பங்களையெல்லாம் சமாளித்து அமைதி யோடும், பொறுமையோடும் வாழ்க்கையை நடத்த அறியாத ஒருவன் மனநலத்தை இழக்கிருன் இடை யூறுகளை வெல்ல வேண்டும் எனவும், மனத்திலே சோர்வுக்கும் தோல்வி மனப்பான்மைக்கும் இடங் கொடுக்கக்கூடாது எனவும் ஒருவன் உறுதியாக முனைந் தால் எவ்வளவு துன்பத்தையும் 'அவன் தாங்கிக் கொள்ளுவதோடு மனம் தெளிவாக இருக்கவும் அவன் வல்லமை பெற்றுவிடுகிருன். தன்னைத்தானே அலசிப் பார்த்துத் தன்னுடைய குறைகளையும் நிறைகளையும் உணர்ந்து, தன்னிடமுள்ள குறைபாடுகளை மெது வாகக் களைய முயல்வதே மனநலத்திற்கு நல்லமுறை யில் அடிகோலுவதாகும். தன்னைத்தானே ஆராய்வது அவ்வளவு எளிதான செயலன்று. இருப்பினும் இதை ஒவ்வொருவனும் பலதடவுை செய்து பார்த்து வெற்றி பெற முயலவேண்டும். எத்ற்கெடுத்தாலும் சிடு சிடுப் பாக இருப்பவன் தனது குறைபாட்டை உணர்ந்து கொண்டால் தனக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நன்மையை விளைவிக்கும். மனநலத்தை ஒருவன் நன்கு பெறுவதற்கு வாழ்க் கையைப்பற்றித் திட்டமான தத்துவத்தைக் கொண் டிருக்க வேண்டும். நாள்தோறும் தோன்றும் வாழ்க் கைச் சிக்கல்களை நல்ல அமைதியான மனப்பாங்கோடு