பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன கலம் 95 நோக்கவேண்டும். அவன் வாழ்க்கையில் மனநிறைவு காணவும் முற்படவேண்டும். வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை எண்ணிப் பார்ப்பதோடு, சமூகத்திலும், தொழிலிலும் தோன்றும் பிரச்சினைகளைத் துணிவுடன் ஏற்றுக்கொள்ள அவன் தயங்கக்கூடாது. மேலும் சமூகத்திலே பற்றுள்ள மனப்பான்மையும், சமூகத் தைப்பற்றிய தெளிந்த அறிவும் மனநலத்தை வளர்க்க உதவும். கருத்து முரண்பாடு, மனக்கிளர்ச்சி, பேராசை, மனப்போராட்டம் போன்றவைகளுக்கு ஒருவன் அடிமைப்படாமலிருக்க வேண்டும். சூழ்நிலைக்கேற்ற வாறு நடக்க முடியாவிட்டால் மனக்குழப்பம், மன நோய், தீய எண்ணங்கள், இழிந்த பழக்கங்கள், பகற் கனவு. அச்சம், கவலை, தாழ்வு மனப்பான்மை, சங்கடங்களைத் தட்டிக்கழிக்க முயலுதல், சமூகத்திற்கு மாறுபட்ட நடத்தை, இன்னும் இவைபோன்ற தீய இயல்புகளும் நடத்தைகளும் உண்டர்கும். நல்ல பழக்க வழக்கங்களை ஒருவன் இளமையிலிருந்தே கைக் கொள்ளுதல் மிகவும் தேவை. வெறும் அறிவு மட்டும் இருந்தால் போதாது. வாழ்க்கையில் தெளிவான குறிக்கோள் இருக்க வேண்டும். தனது குறிக்கோளை நிறைவேற்ற முயல் கின்றவனுடைய மனம் சிதறுண்டு அலையாது. அது ஒரு நிலைப்பட்டு வளம் மிகுந்து நிற்கும். குறிக்கோ ளுடைய ஒருவன் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பான். மனத்திலே கொந்தளிப்பான கிளர்ச்சிகள் தோன் றும்படியாக விடுவது மனநலத்தைக் குலைக்கச் செய்யும். பல வேளைகளிலே மனம் குமுறி எழும்படியான நிலைகள்