32 நாளெல்லாம் ஊரார்பால் நம்பும் படிபேசி வாழ்வெல்லாம் பொய்க்கின்ற வஞ்சம் தனைமறைக்கச் சட்டைத் துணிமாற்றி'தாயகத்தைக் காப்பனென ஒட்டித் திரிகின்ற உத்தமரும் நிற்பதுண்டு; வீரங்கள் பேசிவிட்டு வேட்பாளுர்ாய் நின்று பேரங்கள் பேசும் பெருமனிதர் தாமுமுண்டு: விண்ணப்பந் தந்துவிட்டு வீட்டிற்குச் சென்றவுடன் எண்ணத்தில் சூழ்ச்சிமுறை எத்துணையோ எண்ணியெண்ணி எங்குப் பணங்கிடைக்கும் என்று தவங்கிடக்கும் தங்கக் குணம்படைத்தோர் தாளுருவங் கண்டவுடன் 'முன்வாங்கிக் கொண்டு முகமூடிச் சென்றுடனே பின்வாங்கிப் போய்ப் பதுங்கும் பேதையருங் காணபதுண்டு; முன்னாளில் இந்நாட்டில் தேர்தல் நடந்ததுண்டுஅந்நாளில் தென்னாட்டார் ஆக்கிவைத்த தேர்வுமுறை எந்நாடுங் காணாத ஏற்றந் தருமுறையாம் அன்னார் குடவோலை என்றே அதைச்சொல்வர் தக்கார்யார் நிற்கத் தகுதியிலார் யாரென்றே அக்கால மக்கள் அமைத்த விதியுண்டு: கையூட்டுப் பெற்றார், களவாடல் செய்தவர்கள். பொய்ச்சான்று சொன்னோர் புகுந்தகுதி யில்லாரே என்றுரைத்த சட்டத்தை இன்றெடுத்து நோக்குவமேல் நின்றிங்கு மிஞ்சுபவர் நேர்பாதி காண்பரிது: தொண்டறியார் ஆட்சிமுறை கண்டறியார் தங்கருத்தை விண்டறியார் ஆனாலும் வேட்பாளர் ஆகிநின்று மக்கள் தமையனுகி மாயங்கள் செய்வதெலாம் மிக்க நகையாகும்; மேட்டுக் குடிவாணர்
பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/33
தோற்றம்