உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலரட்டும். - மக்கள், எண்ணிக்கையில் பெருகினர். பண்பாட்டில் அருகினர். உருவத்தாற் பொலிவு பெற்றனர்; உள்ளத்தால் நலிவு பெற்றுள்ளனர். உருவமும், உறுப்புகளும் வ லி வு ம். பொலிவும் பெற்று விளங்குவதால் மட்டும் மக்கள் என்னும் பெயர் வாய்த்துவிடுவதில்லை. உள்ளத்தால் - உயரிய பண் பால் - ஒழுகும் .ெ ந றி ய ல் ம க் க ள் என்று சான் றோரால் அழைக்கப் பெறுவர். ' உயர்திணை என்மனார் மக்கட் கட்டே ' என்றுதான் தொல்காப்பியம் பேசுகிறது. இன்றைய உலகில், அரசியலாயினும் சரி, ஆ ல ய ம் ஆயினும் சரி. கல்வி நிலையமாயினும் சரி கடைத்தெரு வாயினும் சரி-எதனை நோக்கினும் துறைதோறும் துறை தோறும் பண்பாடு குறைந்து வருகிறது. நல்லவர் உள்ளம் எலாம் நலிந்துருகும் வண்ணம் தீமைகள் மலிந்துவிட்டன. பண்பாட்டுக் குறைவு ஒரு நாகரிகமாகவே மாறி வருகிறது. ஆடவராயினும் மகளிராயினும், சிறியராயினும் பெரிய ராயினும், கற்றாராயினும் கல்லாராயினும், எவராயினும். விதிவிலக்கின்றி எவர் மாட்டும் இக்குறைபாடு இரண்டறக் கலந்து பரவி நிற்கிறது. .ெ ந ஞ் சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் ' என்று புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலை குலைவிற்கு!"பலப்பல க ர னி யங் க ள் இருப்பினும் நாம் சிறிதுங் கவலை கொள்ளாது மக்களைப் பெருக்கி வருவதும் ஒரு தலையாய கர ணியமாகும். மக்கட் பெருக்கமே பண்பாடு குன்றுவதற்கு அடி ப்படைந்கரணிய மாகும் என்பது என் எண்ணம். பெருகிவரும் மக்களுக்கேற்பப்