உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 முன்னறிவிப்பு. ഗ്രTത്.”, തിരൂ ീഗ്ര தனிமையிலே ஒருவெள்ளி கிழக்கு வானில் தகதகத்துக் கண்சிமிட்டி நிற்க எங்கள் இனிமையது வளர்ந்துவரக் கண்டோம்; ஆனால் எங்கிருந்தோ ஒருகோழி கூவக் கேட்டோம்: நனிமகிழும் எமக்கிரவு கழிந்த தேயோ? நலமறியாக் குரற்கோழி வாய்தி றந்தால் இனிவிடியல் வருமென்னும் அறிவிப் பன்றோ? என மயங்கி அதன் குரலை வெறுத்து நின்றோம். இன்பத்தின் பங்காளி யாகி நின்றாள் இணைவிழிக்குள் படர்ந்திருக்கும் நிறத்தை விஞ்சப் பொன்பற்றி உருக்கியதை வார்த்த தைப்போல் புதியநிற எழிற்கோலம் அடிவா னத்தைப் பின்பற்றிப் பரவியது; பூமி யெங்கும் பேரொளியை வீசுதற்குப் பகலோன் வந்தான் முன்முற்றக் கதவதனைத் திறந்து வைத்தோம் முகிழ்த்துவரும் காதலுக்குக் கதவ டைத்தோம்