உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சமுதாய வீதியிலே பெரியார் ஈ. வே. ரா கல்லூரி - திருச்சி I-3-75 のマふっあアタ ബട് ' சாதிமதம் வேர்விட்டுக், கூடி நின்ற சமுதாயம் சீர்கெட்டுப், பிளவு பட்டு, மோதிவரும் பகையுற்றுத் தாழ்வும் உற்று முன்னேறும் நெறிகெட்டு, மிடியும் பட்டு, மேதியினும் கீழாகி, உணர்வு கெட்டு, மேலான மதிகெட்டு, மானம் விட்டு, மேதினியில் அடிமைஎன உரிமை கெட்டு, மெய்சுமந்து மாந்தரென வாழ்ந்து வந்தோம். மண் சுமந்த தோள்களிலே வீரங் கொண்ட மாமன்னர் வழிவந்தோர், சங்கம் ஏறிப் பண் சுமந்த பாடலினால் உலகை யாண்ட - பாமன்னர் வழிவந்தோர். தமிழ மாந்தர்: கண்சுமந்து வந்தாலும் பார்வை செட்டுக் காலிடறி வீழ்ந்தனரே என்று நெஞ்சில் புண்சுமந்து நொந்தெழுந்து புரட்சி செய்யப் பொங்கிஎழுந் தரியேற்றைப் போல வந்தார், o