77 திரையுலகக் கற்பு. I-3-1970 匈/ தென்னாட்டுபண்பனைத்துஞ்சேர்த்தெடுத்துக் காணுங்கால் இந்நாட்டுக் கற்புநெறி ஈடில்லாப் பொற்புநெறி என்றே இலக்கியங்கள் எக்காலும் ஒதிவரும்/ 少 இன்றோ அதன்நிலைதான் ஏளனத்தின் கூடார்ம்! ஏற்றமிகும் கற்புநெறி இங்கே திரையுலகில் நாற்றம் எடுத்தொழிய நாடகங்கள் ஆடுகின்றார்: யாரும் அறியா தகத்தே நிகழ்வதெலாம் o பாரும் எனக்காட்டிப் பண்பை அழிக்கின்றார்/ タ கூடும் அகத்திணையைக் கூத்தாட்டக் காரரிவர் ஆடும் புறப்பொருளா ஆக்கிப் படைக்கின்றார்: மேடை மிசையேறும் மெல்லியலார் நல்லுடலில் ஆடை அணிவதற்கே அச்சப் படுகின்றார்: |o சுட்டெரிக்கும் போதில் சுருண்டுவிழும் ஒர்புழுப்போல் வட்டமிட்டு மேனி வளைத்து நெளிந்தவர்தாம் தாயாகும் பண்பைத் தவிடுபொடி யாக்கிவிட்டுப் /歩ー பேயாட்டம் ஆடிப் பெரும்பழியைச் சேர்க்கின்றார்; கற்புநெறி யிங்கே கடைச்சரக் கானதலால் மற்றபடி உண்டோ மதிப்பு?
பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/78
தோற்றம்