பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 வந்து 'பாத் ரூம் கதவை நான் தட்ட மாட்டேனா? - இன்றிரவு மட்டும் அன்று நான் சொன்னேனே...” 'அந்த அரோகரா பாங்க் லெக்டரி அனந்தசயனம் அய்யங்கார் இருக்கானே, அவன் சதா உன் ஞாபகமாகவே இருக்கான்; அதற்காக ஒவர் டிராப்ட்’ கேட்டால் ஒரு பைசாகூடக் கொடுக்க மாட்டேங்கிறான்! - என்ன செய்வது? - இன்றிரவு மட்டும் எனக்காக, இந்த ஏழைக்காக நீ அவனுக்குக் கொஞ்சம் இணங்கி விட்டால்...?” "ஆமாம் போங்கள்! - ஊட்டியிலே எனக்கென்று ஒரு தனி பங்களா வாங்கித் தர வேண்டுமென்று சொல்லி எத்தனை நாளாச்சு?' என்று சற்றே பிகு செய்து கொண்டாள் நட்சத் திரம். அட கடவுளே, உன்னிடம் நான் இதுவரை சொல்லவே யில்லையா?” என்று ஒருபோடு போட்டுவிட்டு, 'ஹொஹ் ஹொஹ் ஹோஹோ என்று சிரித்தார் அவர். அந்தச் சிரிப்பைச் சகிக்காமல் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு, 'என்ன, எனக்குத் தெரியாமலா வாங்கி விட்டீர்கள்?' என்று பரபரப்புடன் கேட்டாள் அவள். 'இல்லை, 'ரெயின்போ மாட'லில் புதிதாகவே ஒன்று அங்கே கட்டிவிடலாமென்று 'பிளான்' போடச் சொல்லியிருக் கிறேன்!” பலே! எங்கே, கை கொடுங்கள்!' ‘'வேண்டாம் லீலா, இனி என்னால் தாங்க முடியாது!' 'எதை?” 'போ லீலா, அதைச் சொல்ல எனக்கு ரொம்ப வெட்கமா யிருக்கிறது!’ 'ஈஸ் இட்? - அதுகூட உண்டா என்ன, உங்களுக்கு?' 'மானத்தை வாங்காதே, இன்றிரவு...' 'சரி, தொலையட்டும் - பத்து மணிக்கு மேல் அவரை நேரே 'ட்ரீம்லேண்ட் ஹோட்டலுக்கு வந்துவிடச் சொல்லுங்கள்.” 'அடி சக்கை, இப்போதுதான் எனக்கு உயிர் வந்தது - நம்பர்?'