பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நெற்றி வியர்வையை வழித்து நிலத்தில் விட்டபடி, இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டே, 'இன்று என்ன விசேஷம்?” என்று கேட்டார். { துக்கி வாரிப் போட்டது குஞ்சம்மாளுக்கு. ‘'என்ன கேட் கிறீர்கள்? - விசேஷமா! - இருங்கள், இதோ வந்துவிட்டேன்!' என்று தடுமாறிக் கொண்டே அவள் மாடிக்கு ஓடினாள் - மகளைக் கேட்கத்தான்! அங்கே அவள் படுக்கை காலியாயிருந்தது. ஏமாற்றத்துடன் திரும்பியபோது கையில் விளக்குமாறுடன் வேலைக்காரி உள்ளே நுழைந்தாள். 'ஏண்டி, அம்மாவைப் பார்த்தாயா..?” 'ஓ, பார்த்தேனே - பாத் ரூமுக்குப் போயிருக்காங்க!' அவ்வளவுதான்; ஓடோடியும் சென்று 'பாத் - ரூம் கதவைத் தட்டினாள். 'யாரது...?’’ 'நான்தாண்டி, கண்ணு! கொஞ்சம் கதவைத் திறேன்?' கதவைத் திறந்த லீலா அதற்குப்பின்னால் மறைந்து நின்று, "என்ன அம்மா?' என்று கேட்டாள். அவள் எப்பொழுதுமே தன் அம்மாவுக்கு முன்னால் மட்டும் கொஞ்சம் வெட்கப்படுவது வழக்கம்! இத்தனைக்கும் குஞ்சம்மாள் அதை விரும்புவதில்லை. ஏனெனில், பெண் என்றால் அத்தனையும் தங்கம் என்றும், அந்தத் தங்கத்தின்மேல் வெட்கம் என்னும் மாசு படிந்தால் அது கறுத்துவிடும் என்றும் அவள் எண்ணி வந்தாள். அதற்காகவே அவள் முறைப்படி தன் மகளை தனிப்பட்ட எவனுக்கும் அதுவரைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் இருந்தாள். எனவே, 'இந்த வெட்கம் வேண்டாம், வேண்டாம்' என்று நான் உனக்கு எத்தனை தரம் சொல்லுவது? வாடி, வெளியே!' என்று அரை நிர்வாணமாயிருந்த அவளை இழுத்து, 'இன்று என்ன விசேஷம்?' என்று கேட்டாள். 'ஒரு விசேஷமும் இல்லையே!' என்று விழித்தாள் அவள். 'ஏண்டி, என்னிடம் கூடவா சொல்லக் கூடாது?’’ 'சொல்ல ஏதாவது இருந்தால்தானேம்மா!'