பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் இதழ் தொகுப்பு காந்தீயவாதி விந்தன் á á - - - - - நாளைக்குத தீபாவளி!' என்று தலையைச் சொறிந்தான் குப்புலிங்கம். 'ஆமாம், அதற்கென்ன இப்போது?’ என்று அன்பையும், அஹிம்ஸையையும் சற்றே மறந்துவிட்டுக் கேட்டார், காந்திஜி யின் படத்துக்கு அருகே விளக்கேற்றி வைத்துக் கொண்டிருந்த தோல் மண்டி துளசிங்கராயர். 'ஒன்றுமில்லை...' 'என்ன ஒன்றுமில்லை?... இதோ பாரும், போதுமென்ற மனம்தான் பொன் செய்யும் மருந்து...' 'உண்மைதான்; ஆனால் ஒன்று...' 'என்ன ஆனால் ஒன்று...?' 'வயிறு போதுமென்று சொல்லாமல் மனம் போதுமென்று சொல்லாது போலிருக்கிறதே!'

  • 'அதற்காகக் கடன் வாங்கித் தீபாவளி கொண்டாட வேண்டுமா, என்ன?”

y 'இல்லை....” 'இல்லையாவது, கில்லையாவது! - வாழ்க்கையில் எளிமை வேண்டும் ஐயா, எளிமை வேண்டும். அது மட்டும் போதாது மனிதனுக்கு; சொல்லில் சத்தியம் வேண்டும், செய்கையில் தூய்மை வேண்டும், நடத்தையில் ஒழுக்கம் வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி வேண்டும். இதைத்தான் காந்தி மகாத்மா அன்று சொன்னார்; நானும் அதைத்தான் இன்று சொல்கிறேன் - உதாரணத்துக்கு