பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கையிலிருந்த 'டர்க்கி டவ'லை அவரிடம் போனாற்போகிற தென்று கொடுத்தாள்! தீர்ந்தது கோபம் பத்மனாபனுக்கு; ஆனந்த பரவசத்துடன் தன் சிரமங்கள் அத்தனையையும் அந்தக் கணமே மறந்து விட்டு, டவலுக்குக்கூட வலிக்காமல் அவள் உடம்பை துடைக்க ஆரம்பித்துவிட்டார் அவர். அதற்குள் தலையைச் சீவிக்கொண்டு துடைத்த துண்டை வாங்கி மேலே போட்டுக் கொண்டு, 'உங்களுக்கு மட்டுமென்ன, எனக்குக்கூடத்தான் என் அம்மாவைக் கண்டால் பிடிக்க வில்லை!' என்று சொல்லிக் கொண்டே ஸோபாவில் சாய்ந்தாள் அவள். 'ஏன் லீலா, ஏன்?' என்று இஞ்சி தின்ற குரங்கு' போல் கேட்டபடி, அவள் பாதகமலங்களுக்கருகே உட்கார்ந்தார் அவர். 'அவள் சொல்கிறாள் - நான் ரொம்ப வெட்கப்படு கிறேனாம்!' f : . "நிஜமாகவா? - ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது! 'என்னைக் கேலியா செய்கிறீர்கள், கேலி!” என்று அவள் 'ஊடல் புரிந்தாள். "சீ கழுதை, உன்னையாவது நான் கேலி செய்யவாவது!' என்று அவள் கன்னத்திதல் லேசாகத் தட்டிக் காதல் புரிந்தார் அவர். 'இல்லை, நீங்கள் தான் கழுதை!' என்று அவள் கொஞ்சினாள். I 'இல்லவே இல்லை, நீ தான் கழுதை!' என்று இவர் மிஞ்சினார். இப்படியாக அவர்களுடைய 'காதல் உதயமாகிக் கொண்டிருந்த போது, அதை மறைக்க வந்த கருமேகத்தைப் போலக் கையிலே பர்மாப் பாதரட்சைகளுடன் ஓ.கே. அங்கு வந்து, 'ஐயா இன்று தன்னைத்தான் மறக்கவில்லை; மற்றவற்றை யெல்லாம் மறந்தே போய்விட்டார்!’ என்றான். திடுக்கிட்டுத் திரும்பினார் 'ஐயா - நல்ல வேளை, அன்று அவன் கையில் பாதரட்சைகள் இருந்தன - இல்லா விட்டால் அவனாவது, பிழைத்திருப்பதாவது! - அதிலும், நிசிலீலாவுக்கு