பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 தன் தலையில் தானே அடித்துக்கொண்ட வண்ணம், சீசீ, எனக்கு மூளையே இல்லை; கொஞ்சங்கூட இல்லவே யில்லை!' என்று அலுத்துக் கொண்டே சென்று அந்தக் கதவையும் இழுத்துச் சாத்தித் தாளிட்டு விட்டு வந்தார் படாதிபதி. 'இப்பொழுதுதானா அது உங்களுக்குத் தெரிந்தது? - டு லேட்!” என்றாள் நட்சத்திரம். 'அது சரி, உன் அம்மாவை இப்பொழுது பார்த்தால்கூடவா இனிக்கும்?' என்று கேட்டுக்கொண்டே பத்மனாபன் உட் கார்ந்தார். 'அவளுக்கும் உங்களுக்கும் ஆன வயதை யாராவது ஞாபக மூட்டினால் தானே?” 'ஏன், எங்களுக்குத் தெரியாதா?’’ 'தெரிந்தால் ஏன் இந்தக் கோலம்?” 'எல்லாம் உன்னால்தான்!' 'அது கிடக்கட்டும்! - நேற்றிரவு என்ன நடந்ததென்று தெரியுமா, உங்களுக்கு?' 'எங்கே, என்ன நடந்தது என்று சொன்னால்தானே தெரியும்?' 'அதற்குள்ளே மறந்துவிட்டீர்களா? - அப்படியானால் சொல்ல மாட்டேன், போங்கள்!' நானும் கேட்க மாட்டேன், போ!' இருவரும் ஒருவரை யொருவர் ஒரு கணம் பார்க்காமல் இருந்தனர்; மறுகணம் ஒருவரை யொருவர் அறியாமல் பார்த்துப் புன்னகை பூத்தனர். 'நான் 'டு விட்டுவிடுவேன்!" என்று அவள் அவரைப் பயமுறுத்தினாள். நானும் 'டு விட்டுவிடுவேன்!” என்று அவர் அவளைப் பயமுறுத்தினார். 'ஒன், டு...' 'ஐயோ, வேண்டாம் - பேசு, லீலா பேசு!' என்று கெஞ்சினார் அவர்.