பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 'வேறே வழி? ஒரு நல்ல 'பைனான்ஷியர்' கிடைக்கிற வரையிலே அப்படித்தான் இருக்கணும்!” பைனான்ஷியர் சும்மா கிடைத்துவிடுவானா? நான் ஒரு மாலாவைத் தயார் பண்ணி வெச்சிருக்காப் போல நீங்க ஒரு பாலாவைத் தயார் பண்ணி வெச்சிருக்கணும்!” என்றான் பீதாம்பரம் கொஞ்சம் 'குத்த"லாக. 'எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே!” என்று பதிலுக்குக் குத்த"லாகச் சொல்லிக்கொண்டே, ஒரு ஸிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார் சோமு. பீதாம்பரம் திடுக்கிட்டு, 'மாலா என் மனைவி என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று கேட்டான். 'அதிருக்கட்டும், பாலா என் தங்கை என்று உமக்கு எப்படித் தெரிந்தது?' என்று திருப்பிக் கேட்டார் சோமு. 'நீங்களாவது சேர்ந்து வாழ்கிறீர்கள்; நாங்கள் இருவரும் சேர்ந்துகூட வாழ்வதில்லையே? - அதனால்தான் எப்படித் தெரிந்தது என்று கேட்கிறேன்!' 'என்ன ஐயா, இப்படிக் கேட்கிறீரே! பாம்பின் கால் பாம்புக்குத் தெரியாதா? எல்லாவற்றையும் 'அட்ஜஸ்ட்' பண்ணிக் கொள்ளக்கூடிய ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது; உங்களுக்கு இல்லை. அவ்வளவுதான் உமக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்!” “என்ன இருந்தாலும் இரவில் சில சமயம் இங்கே வந்து என் மனைவி எனக்கு முன்னால் பல பெரிய மனிதர்க'ளுடன் பழகும்போது...' 'அதனாலென்ன, பொன்னைப் பொதுவுடைமை யாக்கும் வரை நாமெல்லாம் பெண்ணைப் பொதுவுடைமையாக்க வேண்டியதுதான்! இல்லையென்றால் நீங்கள் இங்கே "ப்ரொடக் வடின் மானேஜ'ராக நீடிக்க முடியுமா? நான்தான் டைரக்ட'ராக நீடிக்க முடியுமா?’’ 'அதுதான் எனக்கும் கவலையாயிருக்கிறது; வரவர மாலாவின் முகத்தைப் பார்த்தால் எனக்கே பிடிக்கவில்லை...'