பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 செல்வோர். இந்த எண்ணத்தோடு பார்த்தால் அவற்றின் அறியாமையை நினைத்து இரக்கம் கொள்வார்கள். o o * ** *? குருவிகளின் நிலையில், புலி சிங்கங்களின் நிலையில் மனிதன் இருந்தால்? - ஒன்று, வாழமுடியாத இடத்தில் வீடு கட்டி இருக்க மாட்டான். அல்லது. அந்த இடத்தை வாழத்தக்க இடமாக மாற்றிக் கொண்டிருப்பான். தடுத்துக் கெடுப்பவர்களுக்கு உரிமை உள்ள இடத்தில் வீடு கட்டியிருக்க மாட்டான். அல்லது, தடுக்க முயல்பவர்களை அழித்தோ, அடக்கியோ தடையைப் போக்கிக் கொண்டிருப்பான். இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்யாமல் தன் முயற்சியை மனிதன் மேற்கொள்ள மாட்டான். தோல்வி என்று அறிந்த பின்னும், செய்ததையே செய்து கொண்டு அல்லற்பட மாட்டான். நீர் நிறைந்த பள்ளத்தில் வீடு கட்டும் மனிதன், அந்தப் பள்ளத்தை மண்ணாலும் கல்லாலும் தூர்த்த பிறகே, அதன்மேல் வீடு கட்டமுயல்வான். நிலத்தின் உரிமைபற்றி இடர்ப்பாடு நேர்ந்தால் வழக்காலும் வம்பாலும் அந்த நிலத்தைத் தன்னுடையதாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவான். அல்லது, தோல்வியின் அறிகுறியை உணர்ந்தால் அதைக் கைவிட்டு வேறு இடம் நாடிச் செல்வான். எவ்வாறேனும், பயனற்ற முயற்சியைத் திரும்பத் திரும்பச் செய்வது மனிதனுடைய பண்பு அன்று. புலி, சிங்கங்களின் நிலையில் மனிதன் இருக்க நேர்ந்தால் அவற்றைப்போல் நாழிகைதோறும் நாள்தோறும் திரும்பத் திரும்ப நடந்து திரிந்து சோர்வுற்று உறங்கமாட்டான். தன்னைச் சிறைப்படுத்திய மனிதனின் ஆற்றலையும் தன் ஆற்றலையும் ஒப்பிட்டுச் சீர் தூக்கிப் பார்ப்பான். உய்யும் வழி இல்லை என்று அறிந்தால், மானத்தைக் காத்து உயிரை விடுவான்; அல்லது உயிரைக் காத்து மானத்தை விடுவான். பகைவனுக்குப் பணியாமல் சாவான்; அல்லது பகைவன் விரும்பும் ஏவலாளாகி வாழ்வான். குருவிகளைப் போலவோ, விலங்குகளைப்போலவோ காட்சிப் பொருள்களாக நெடுங்காலம் இருக்க அவனால் இயலாது. தப்பி ஓட வழி எங்கே என்று மனிதன் கண்ணால் மட்டும் பார்க்கமாட்டான்; மூளையாலும் எண்ணிப் பார்ப்பான். வழி எங்கும் இல்லை என்றால், தானே ஒரு வழியைப் படைக்க முயல்வான். கம்பிகளின் வலிமை, சுவர்களின் உறுதி இவற்றை எண்ணுவான்; தன் கைகளின் வலிமை, நகங்களின் ஆற்றல்