பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 'ஓயாமல் பேசும் இந்தப் பிச்சைக்காரனை நான் வெறுக்கிறேன். அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்பதைத் தவிர, மீதி எல்லா விஷயங்களைப் பற்றியும் இவன் தர்க்கத்தில் பேசித் தீர்த்துவிடுகிறான்.' இது உண்மை ஸாக்ரட்டீசுக்கு வேலை பேசுவது; பேச்சின் மூலம் அபூர்வமான தத்துவங்களைக் கண்டு பிடிப்பது; கேள்வி கேட்டுக் கேட்டு அதன் மூலம் மற்றவர்களுக்குச் சத்தியத்தைக் காட்டுவது - இப்படி, வீட்டைக் கவனிக்காமல் ஊருக்கு உழைத்து, அறிவைப் புகட்டியவன் தலை மீது, இவன் மனைவி தண்ணீரைக் கொட்டியதாக ஒரு கதை உண்டு. அது உண்மையாக இருந்தாலுங்கூட வியப்பில்லை கி.பி. 469க்கு முன்பே, கிரேக்க தேசத்துக்குத் தலைநகரம் போல் விளங்கிய ஆதென்ஸ் நகரத்தில் பிறந்தான் இவன். 'முதலாவது, உன்னை நீ தெரிந்து கொள்' என்று நம் அற நூல்கள் போதிக்கின்றன. ஸாக்ரட்டீஸ் தன்னை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தான். மகா ஞானியான அவன், 'ஆண்டவனே. எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே?' என்று பல முறை வருந்திக் கூறினான் இவன் விரும்பியிருந்தால், இவனுடைய கல்வித் திறமைக்கும் புத்தி நுட்பத்துக்கும் மன்னர்களுடன் சமமாக உட்கார்ந்து சுகமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், இவன் பொருட் செல்வத்தை விரும்ப வில்லை. உதாரணமாக, ஒர் அரசன் இவனைத் தன் நாட்டுக்கு அழைத்து, அங்கேயே இருக்கும்படியாகவும், ஏராளமாய்ப் பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தான் ஸாக்ரட்டீஸ் மறுத்து விட்டான். 'என்னுடைய தேவைகள் சிலவே, ஓர் அற்பத் தொகைக்கு இங்கே மூன்று வேளைச் சாப்பாடும் கிடைக்கும், ஒரு காசுகூடக் கொடுக்காமல், வேண்டிய அளவு குடிக்க இங்கே ஊற்று நீரும் இருக்கிறது!' என்று சொல்லிவிட்டான். இவனுடைய புகழ் பெருகியது. மக்கள் இவனை நேசித்தார்கள். உயர் குலத்துதித்த இளைஞர்கள், இவனுடைய அறிவெனும் காந்த சக்தியால் கவரப்பட்டு, தெருத் தெருவாக இவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள் ஒரு கொள்கையோ, அல்லது வழக்கமோ பண்டைக் காலத்தி லிருந்து வந்தது என்பதற்காக அதை இவன் ஒப்புக்கொள்வதில்லை. தன் புத்திக்கு எது உண்மையென்று தோன்றுகிறதோ, அதையே ம-இ-10