பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 முதலியாரவர்கள், வேதியர் தமைத்தொழும்; வேந்தரைத் தொழும்; தாதியர் தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்; ஏதுமொன் றுணர்குறா திருக்கு நிற்குமால்; காதலென் றதுவுமோர் கள்ளில் தோற்றிற்றோரு! என்ற செய்யுளைப் பாடி, இதன் பொருளைச் சாப்பாட்டிற்கப் புறம் அனுபவிப்போம் என்றார்கள். இடைவேளையில் புதிதாக வந்திருந்த மூவரையும் விசாரித்து உபசரித்தார்கள். புதியவர் மூவரும் அசலூரிலிருந்து பாபநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்திற்கு ஒரு கல்யாண நிச்சயம் பண்ணும் பொருட்டு வந்தவர்கள் வீட்டார்களிடத்தில் பாபநாசம் சென்று அருவியில் நீராடி சுவாமி தரிசனம் செய்து திரும்புவதாகச் சொல்லி வெளியேறியவர்கள் டி.கே.சி.யுடைய சொல் விருந்தை அனுபவித்துத் தம்மையும் தமது காரியத்தையும் வீட்டையுமே மறந்து அப்படியே இருந்துவிட்டனர். நேரம் போனதும், வீட்டிலுள்ள வர்கள் தங்களை எதிர்பார்த்திருப்பார்கள் என்பதும் இவர்களது சிந்தனையிற் படவே இல்லை. முதலியாரவர்கள் சொல்லமுதளித்து முடித்தபின்தான் சுயபேதம் பெற்று நனவுலகத்திற்குத் திரும்பினார்கள். இவர்களையும் உடனிருந்துண்ணச் செய்து, விருந்து முடிந்த பின்னர் மீண்டும் பரதன் செய்கையைக் கள்ளுண்டவனது செய்கைகளோடு ஒப்பிட்டு மிக அழகாக எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்கள். விக்கிரமசிங்கபுரத்திலிருந்து வந்த அன்பர்களுக்கு இன்னும் வீடு செல்ல மனம்வரவில்லை. முதலியாரருகிலேயே இருந்து சொல் விருந்து நுகர்ந்து கொண்டிருந்தனர். இதனிடையில் வீட்டிலுள்ளவர்கள் காத்திருந்து காத்திருந்து தம் உறவினர்கள் இத்தனை நேரமாகியும் வராமலிருப்பது கண்டு மிகவும் கவலை கொண்டார்கள். மூலைக்கு மூலை ஆட்களை அனுப்பித் தேடச் செய்தார்கள். ஒருவேளை பாபநாசத்திற்குச் சென்றவர்கள் அருவியில் நீராடும்போது வழுக்கி ஏதாவது நேர்ந்து விட்டதா என்றுகூட அச்சங் கொண்டார்கள் நேரம் ஆக ஆக, இந்த அச்சம் அதிகரித்து