பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 செய்து, கம்ப ராமாயணப் பகுதிகளையும், தனிச் செய்யுட்களையும் வாசித்து விளக்கம் செய்து வந்தார். இவ்வாரக் கூட்டமே பின்னால் 'வட்டத் தொட்டி' என்ற பெயரால் சிறப்பாக விளங்கியது. விழா நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் 1926-ல் டி.கே.சி. சென்னை சட்டசபை அங்கத்தினர் ஆனார். அது முதல் சென்னைக்கு அடிக்கடி வருவதுண்டு. அக்காலங்களில் மயிலாப்பூரில் பூரீ பெ. நா. அப்பு:ஸ்வாமி அய்யரவர்கள் வீட்டில் நண்பர்கள் கூடியிருந்து டி.கே.சி.யின் விஸ்தாரமான கவிதை விளக்கப் பேச்சு முதலியவற்றைக் கேட்டு ஆனந்தம் அடைந்து வந்தனர். காலஞ்சென்ற கலாரஸிக சிகாமணி வி. வி. பூரீநிவாஸய்யங்கார் அவர்கள் ஒரு முறை இக்கூட்டத்திற்கு வந்தார்கள். டி.கே.சி.யின் சொல்லமிழ்தை உண்டபின் அவரது பிரசங்கமொன்றை தாம் வசித்து வந்த லஸ்" பங்களாவில் நிகழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதற்கு இணங்கி நடத்திய பிரசங்கம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அப் பிரசங்கத்திற்குச் சென்னையிலுள்ள பிரமுகர்களிற் பலரும் வந்திருந்தனர். கற்றறிந்த உயர் குடும்பத்துப் பெண்களும் வந்தனர். அன்றைய பிரசங்கம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. கம்பனது அபாரமான கவித்திறம் மிக நன்றாக விளக்கப்பட்டது. அவனது கவிதையிலுள்ள நயங்கள் பலவும் முதலியாரவர்களால், இனிய, வசீகர மான, தெளிவான, சாதாரணப் பேச்சு முறையில் தங்களுக்கு ஊட்டப் பெற்றதைக் கண்டு களித்துப் பலரும் பெருமகிழ்ச்சி கொண்டனர். பூரீ வி. வி. பூரீநிவாஸய்யங்கார் அவர்களும் பிரசங்கத்தின் இறுதியில் பிறர்க்குச் சொல்லி யுணர்த்த முடியாத கவிதைத் தத்துவங்களை டி கே. சி. தமது ஆழ்ந்த அனுபவத்தினாலும் இனிய சொல்வளப் பேராற்றலாலும் விளக்கி நாமும் அறிந்து அனுபவிக்கும்படி செய்து விட்டார் என்னும் கருத்துப்பட ஆங்கிலத்தில் அருமையாகப் பாராட்டிப் பேசினார். அப்புஸ்வாமி ஐயரது வீட்டில் தோன்றிய அழகிய சுடர் விளக்கு இப்பிரசங்கத்தின் பின் பெருஞ் ஜோதியாய்ப் படர்ந்து சென்னை நகரெங்கும் ஒளிர்ந்து பிரகாசித்தது. ஒரு சமயம் பாரதி நூல்களைப் பற்றிய ஒரு விவாதம் சட்டசபையில் நிகழ்ந்தது. காலஞ்சென்ற சத்தியமூர்த்தி அதில் வெகு உற்சாகமாகப் பேசினார். பூரீ டி.கே.சி. பாரதி பாடல் ஒன்றைப் பாடி விளக்கஞ் செய்து அங்கத்தினர் மனத்திலெல்லாம் பெரு மகிழ்ச்சியை ஊட்டினார்கள் பின்னர் 1928-ல் இந்துமத பரிபாலன சபையின் உறுப்பினராக டி கே சி. நியமிக்கப்பட்டனர். இதனால் சென்னையிலேயே அவர்கள் வசித்து வரும்படி நேர்ந்தது. முதலில் மயிலாப்பூரிலும், பின்னர்,