பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஓராயிரம் பாரதிகள்!” நாரண துரைக்கண்ணன் 'எழுத்தாளன் ஜன சமுதாயத்தை நிர்மாணிக்கும் எஞ்சினியர்' என்றார் புது உலகச் சிற்பி ஸ்டாலின். இதற்கு முற்றிலும் தகுதியுடையவராகப் பாரதியார் விளங்கிய தற்குக் காரணம் அவர் மக்களின் கவிஞராயிருந்ததுதான்! மற்றக் கவிஞரெல்லாம், எழுத்தாளரெல்லாம் கடவுளைப் பற்றியும் காதலைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் அதன் எழிலைப்பற்றியும் மட்டும் பாடியும் எழுதியும் வர, பாரதி ஒருவரே மனிதனைக் குறித்து, அவனுடைய உரிமை வேட்கையைக் குறித்து, அவனுடைய வாழ்க்கை இலட்சியத்தைக் குறித்துப் பாடினார். தமிழ் நாட்டில் மனிதனைப் பற்றி முதலில் சிந்தித்த மனிதன் அவர்தான்; மனிதனைச் சிந்திக்க வைத்த முதல் மனிதரும் அவர்தான்! உண்டு உடுத்து உறங்குவது மட்டும் மனிதன் வேலையல்ல; அதற்கு மேலும் அவன் ஆற்றவேண்டிய கடமைகள் பலவுண்டு, அவன் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் உண்டு எனச் சுட்டிக் காட்டியவர் பாரதி. அவர் வாழ்வில் எவ்வித இலட்சியமுமின்றி வீண்பொழுது போக்கும் புல்லர்களைப் பார்த்து மிகவும் பரிதாபப் படுகிறார்: 'தேடிச் சோறு நிதந் தின்று-பல சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக வுழன்று-பிறர் வாடப் பல செயல்கள் செய்து-நரை கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும்-பல வேடிக்கை மனிதரைப் போலவே-நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்று அவர் பாடியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இவ்விதம் வீணில் உண்டு உடுத்து உறங்கிக் காலங் கழிக்கும் வீணர்களையும்