பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 தற்போது, கவிஞர் பாரதியாரால் 'தம்பி!' எனப் பரிவுடன் அழைக்கப்பட்டவரும், பாரதியாருக்குப் பலவகையில் உதவி புரிந்து, அவருடைய கவிதைகளை முதன் முதலாக வெளியிட்டுப் புகழ் பெற்றவருமான பரலி சு. நெல்லையப்பருக்கு நிதி திரட்டப் பட்டு வருகிறது. ஆனால் இந்த நிதி முயற்சியில் போதுமான ஊக்கம் இன்னும் காணப்படவில்லை; ஆதரவும் அதிகம் கிடைக்கவில்லை. எதற்கெடுத்தாலும், 'தமிழன். தமிழன்' என இனக்குரல் எழுப்பு பவர்கள் நெல்லையப்பர் போன்ற ஒரு தமிழ்ப்பத்திரிகையாளருக்கு, தமிழ் எழுத்தாளருக்கு நிதி திரட்டி உதவ முன்வராமலிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம் மட்டும் அல்ல; வெட்கக் கேடான விஷயமுமாகும். இன்று தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் மக்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை; அரசியல் வாதிகளால் யாதொரு அற்புதமும் நடக்கவில்லை; சமூகச் சீர்திருத்தக்காரர்களால் சமத்துவத்தையும் சமூக நீதியையும் உண்டு பண்ண முடியவில்லை; பொருளாதார நிபுணர்களால் புதிய சமுதாயத்தை நிர்மாணிக்க முடியவில்லை. காரணம் தேசபக்தர்கள், அரசியல் வாதிகள், சீர்திருத்தக்காரர்கள். பொருளாதார நிபுணர்கள் ஆகியோரில் பெரும்பாலோர் தங்களு டைய கடமையைப் பொறுப்புணர்ந்து செய்யாததுதான்! - இவர்களில் பலர் சுயநலத்தைக் கருத்தில் கொண்டே பொதுத் தொண்டில் ஈடுப்ட்டிருப்பதாகப் பாவனை செய்கிறார்கள்; அரசியல் வியாபாரி களாக இருப்பதோடு சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்கள். பொது மக்களைப் பகடைக்காய்களாக உபயோகப்படுத்தித் தங்கள் வாழ்க்கையில் பெரும் பயனை அடைய இவர்கள் முயல் கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், 'ஒரு பாரதிக்கு மணி மண்டபம் கட்டிவிடுவது பெரிதல்ல; "ஒராயிரம் பாரதிகள் நம் நாட்டில் பரந்து கிடக்கிறார்கள். அவர்கள் பாரதிபோல் பட்டினி கிடந்து சாகாமல் இருக்க இன்றைய சமுதாயம் ஏதாயினும் செய்தாகவேண்டும்' என்று தங்களை மறந்து பேசாமல் இருந்தால் அதுவே சமூகத்திற்கு அவர்கள் செய்யும் பெரிய நன்மையாகும்! - செப்டம்பர் 1954