பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வ. வே. சு. கண்ட வழி 'பொறுப்பைத் தட்டிக் கழிப்பதில் தமிழர்கள் பலே பேர்வழிகள்: என்று அமரர் வ. ரா. அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அத்துடன், உண்மையைத் தட்டிக் கழிப்பதிலும் அவர்கள் பலே பேர்வழிகள் என்று சென்ற இதழிலிருந்து தொடர்ந்து வெளியாகும் நண்பர் தமிழ் ஒளி'யின் விமரிசனக் கட்டுரையைப் பற்றி நேயர்கள் சிலர் எழுதும் கடிதங்களிலிருந்து நமக்குத் தெரியவருகிறது. அவர்கள் நினைப்பதுபோல் இந்தக் கட்டுரையை இங்கே நாம் பகையை வளர்ப்பதற்காக வெளியிட வில்லை; இலக்கிய"த்தை வளர்ப்ப தற்காகவே வெளியிடுகிறாம். 'தடியெடுத்தவர் தண்டற்காரன்: ' என்பது தமிழ்நாட்டின் பழமொழியாயிருக்கலாம். ஆனால் அதுவே தமிழர்களின் பண்பாட்டை வளர்க்கும் லட்சிய மாகிவிடக் கூடாதல்லவா? -ஆசிரியர். 'ஒரு கவிஞனுக்கு - தமிழ்க் கவிஞனுக்கு எத்தகைய தகுதி யிருக்கவேண்டும்?' என்பதைப் பற்றித் திரு வ.வே.சு அய்யர் கூறுவதைக் குறிப்பிடுவது இங்கே பொருந்தும்: 'அவன் (கவிஞன் யாப்பிலக்கணத்தைப் பிழையற ஆராய்ந்து, கவிகள் எழுதி எழுதி அப்பியாசம் செய்து கொண்டு, நல்ல சொல் நயமும் ஒசையும் தேடிக்கொண்டு தனக்கென்று ஒரு நடையை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும்...' சிறந்த ஞானியும் ஒப்பற்ற விமரிசகருமான திரு வ.வே.சு. அய்யர் மேற்கண்டவாறு கூறியதற்குக் காரணம் என்ன? இலக்கன வெறி பிடித்து அவ்வாறு கூறினாரா? இல்லை, மொழயின் இயல்பறிந்து, தமிழின் சிறப்புணர்ந்து அப்படிக் கூறினார் செய்யுளும் யாப்பும் அர்த்தநாரீசுவரத் தன்மை பெற்றுத் தமிழில் பின்னிக் கிடக்கின்றன பாட்டின் வேகத்திற்கு மிடுக்கும் பாலத்திற்கு லயமும் தேடித்தருவது யாப்பின் அமைதிதான். தமிழ் இலக்கியமே செய்யுள் வடிவம் பெற்றுப் பிறந்ததால், யாப்பிலக்கணம் என்பதும் இயல்பான ஒன்றாக அமைந்துவிட்டது பாட்டின் வேகத்தைச்