பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 தமிழ் நாட்டில், மதுரை மாநகரைச் சேர்ந்த வைகை நதி வற்றிக் கிடக்கிறது. கரையோரத்தில் முழங்கால் அளவுக்கு அசுத்தம் நிறைந்த தண்ணிர் ஓடுகிறது. இன்னும் பொழுது விடியவில்லை; இருள் அகலவில்லை. கீழ் வானத்தில் மேகச் சுருள்கள் குமைந்து குமைந்து பரவுகின்றன. கதிரவன் உதயத்திற்கு, வரவிற்கு வழி விடுகின்றன. அந்த இருளில், மங்கிய ஒளியில் இரு உருவங்கள் வருகின்றன. தமிழ் நிலத்தின் மண்ணை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொள்கின்றன. ஆற்றுப் பாலத்தின்மீது ரயில் வண்டி கடகட'த்து ஓடி மறைகிறது. கண்ணகி திகைக்கிறாள். எல்லாம் புதுமையாகத் தோன்று கின்றன அவளுக்கு; எதையும் அவளால் ரசிக்க முடியவில்லை. ஆனால் அவையனைத்தும் அவளை மயக்குகின்றன; பிரமிக்க வைக்கின்றன. 'இவையெல்லாம் தமிழர்களின் வளர்ச்சிக்குச் சான்றுகள்!' என்று கூறி மகிழ்வுறுகிறார் இளங்கோ. திடீரென ஒரு புதுவித சப்தம் கேட்கிறது - போலீஸ்காரனின் விசில் சப்தம்தான்! 'ஏ ஆயி! பொளுது விடிஞ்சப்புறமுமா வியாபாரம்? - சீ! ஊரையே நாறடிக்குதுங்களே, கழுதைங்க!' என்று சலித்துக் கொண்டே அவர்களுக்கருகே வருகிறான் போலீஸ்காரன். 'அப்பனே; என்ன சொல்கிறார்?' என்றார் இளங்கோ. அட, ஒன்னெ சொல்லலைய்யா....நீ போ! நட ஆயி, ஸ்டேஷனுக்கு!' 'ஐயா, நாங்க வெளியூர்க் காரங்க - யாத்திரைக்கு வந்தோம்' 'என்னாப்பு....நம்மகிட்டேயே 'ஜர் உடர்றே?...இது பஸ் ஸ்டென்ட் கிறாக்கி, எனக்குத் தெரியாதா? - யாத்திரைக்கு வந்தவங்க மூஞ்சியெப் பாத்தா தெரியலே....இந்நேரத்திலே இங்கே என்னாய்யா வேலை? இவ ஒன் வப்பாட்டியா?” 'அட பாவி, அவ கண்ணகிடா!' י ין 'ஆமாங்க, அவருக்குத் தங்கச்சி ம-இ-2