பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சந்து முனை! அங்கே போவோர்க்கு வழிவிட முடியாது என்று சொல்வது போல் மூன்று பெண்கள் அலங்கோலமாக வழிமறித்து நின்றார்கள். அவர்கள்மேல் வியர்வைப் பிடிப்பும், பெளடரின் இறுக்கமும் கலந்த ஏதோ ஒரு நெடி!-மேலே போக முடியாமல் இளங்கோ தயங்கி நின்றார். 'கலீர்' என்ற சிரிப்பொலி! "என்னாங்க, பார்க்கிறீங்க?' 'அவசரப் படாதேடி அவர் நோட்டம் பார்த்துத்தான் வருவாரு!” 'பார்த்தது போதும், வாங்க!” இளங்கோவுக்கு ஒன்றும் புரியவில்லை; வந்த வழியே திரும்பினார். ஒருத்தி ஓடிச் சென்று அவர் கையைப் பற்றினாள். 'யாரம்மா, நீ?” 'உள்ளே வாங்க, சொல்றேன்!' அவளுடன் கூண்டு போன்ற ஒரு சிறு வீட்டுக்குள் நுழைந்தார். அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. அவளிடம் கற்பில்லை; அவரிடம் காசில்லை. வெளியே விரட்டப்பட்ட அடிகளார், குமுறும் நெஞ்சுடன், பொங்கும் கண்ணிருடன் வீதி வழியே நடந்தார். 'ஐயோ, தமிழ்நாடே!' என்று அவர் நெஞ்சு நைந்து புலம்பிற்று. கண்ணகி தங்கியிருந்த சுதர்சனம் பிள்ளையின் மாளிகைக்கு அவசர அவசரமாக ஓடினார் அடிகளார். இருள், தமிழகத்திலே கவிந்து கிடக்கும் இருள்! - அடிகளாருக்கு அது சாதாரண இருளாகத் தோன்றவில்லை; அதைக் கண்டு அவர் மருண்டு மருண்டு ஓடினார்..... அந்த மாளிகையிலும் அதே இருள் - வாசற் கதவுகள் மூடிக்கிடந்தன.