பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சுகந்தா, 'இங்கே இருந்தாத் தான் என்ன செய்திடுவான்? வாடா, வந்து என்னைத் தொடு, உன் கதி என்ன ஆகுதுன்னு பாரு' என்று அவள் பிடியிலிருந்து திமிறினாள் மாணிக்கம் தங்களை நோக்கி வருவதைக் கண்டு குழந்தை இன்னும் பலமாக அலறத் தொடங்கியது. திலகம் சுகந்தாவை விடாமல் பிடித்து உட்புறம் இழுத்தாள். அந்தச் சமயம், என்ன திலகம், என்ன சண்டை?' என்று கேட்டுக்கொண்டே படிகளில் நின்றவர்களை விலக்கிக் கொண்டு மேலே வந்தான் கதிரேசன். அவனைக் கண்டவுடன் திலகத்தின் தெம்பு உயர்ந்தது. 'நீங்க வாங்க, அக்கா' என்று சுகந்தாவை வற்புறுத்தி இழுத்தாள். சுகந்தா மறுபடியும் திமிறித் திலகத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, 'அறியாக் கொழந்தை தெரியாமெச் செய்துட்டா, கடாமாடு மாதிரி வந்து அதை அடிக்கிறானே ஆம்பிள்ளே! - சீ. தூ! மானங் கெட்ட மாடு!" என்று மாணிக்கத்தின் வெறியை மேலும் தூண்டிவிடும் வகையில் கூச்சல் போட்டாள் அதுவரை தயங்கித் தயங்கி நகர்ந்த மாணிக்கம் ஒரே தாவில் அவளை யடைந்து, 'யாரைக் கடாமாடுன்னே?' என்று கையை ஓங்கிவிட்டான். கதிரேசன் சட்டென்று பாய்ந்து அவன் கையைப் பற்றிக்கொண்டு, 'என்னய்யா, பொம்பளைகிட்ட சண்டை போட வந்துட்டே?” என்று அவனைப் பின்னால் தள்ளினான். மாணிக்கம், 'அவளா ஸார், பொம்பளை? பேசறதைப் பாத்தியா, ஸ்ார்! கீழே ஒருத்தர்கிட்டப் பேசிக்கிட்டு நின்னா, இங்கே பாரு ஸார், சோத்தை அப்படியே மேலே கொட்டிட்டா என்று தன் கோலத்தைக் காட்டினான். சுகந்தா, 'கொழந்தை தெரியாமக் கொட்டிட்டா, அதுக்காக அதைத் தொட்டு அடிக்க உனக்கு என்ன ரைட் இருக்கு? - பிள்ளையைப் பேயறையற மாதிரி அடிக்கறாங்கன்னா, இந்தப் பாவிமகன்' என்று குறுக்கிட்டாள். - என்ன நடந்ததென்று கதிரேசன் புரிந்து கொள்வதற்குள் மாணிக்கம் தன் கையை விடுவித்துக்கொண்டு, 'யாரைப் பாவி மகன்னே?' என்று சுகந்தாவை அடித்தே விட்டான்