பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 உடனே திருநாவு தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டான். ஒரு நிமிஷம் கழித்து விக்கல்கள் விம்மல்களுடன் கதிரேசனிடம், 'மாமா! உங்களைப் பெரிய பயந்தாங்கொள்ளின்னு நான் நெனைச்சுட்டேன். அதுக்கப்புறம் இந்த வீட்டிலே இருக்கவே எனக்குப் பிடிக்கல்லே. உங்ககிட்டவும் அக்காகிட்டவும் சொல்லாம எங்கேயாவது ஒடிப்போயிடணும்னு வேறே தீர்மானிச்சுட்டேன்!' என்றான். திலகம் பயத்துடன், 'ஏன் தம்பி, எதுக்காக?' என்றாள். கதிரேசன், 'அன்னிக்கு ராத்திரி நான் ரெயில்லே அந்த முரடனோடே சண்டை போடல்லே அதுக்காகத்தானே? - பைத்தியக்காரா! அப்போ நான் பயத்தினாலே ஒதுங்கிப் போகல்லே; பெண்பிள்ளைகளுக்கு எதிரிலே ஆண்பிள்ளைகள் சண்டை போடறது அசிங்கம், பாமரத்தனம்னு ஒதுங்கிட்டேன் - இன்னொன்று உனக்குத் தெரியுமோ? - ஆத்திரம் வந்தாக்கூடச் சண்டை போடாம ஒதுங்கிப் போறதுக்குத்தான் ரொம்பத் தைரியம் வேணும்' என்றான். திருநாவு திருப்தியடைந்தான். திலகத்திடம், 'எனக்கு இது அன்று இரவே மனத்தில் பட்டு விட்டது. இருந்தாலும் இன்று காலையில் என் மனசு முறிஞ்சு போகும் எல்லையை எட்டிவிட்டது. இவனை எப்படித் திருத்துவது என்று புரியாத கோபத்திலேதான் நான் காலையிலே வெளியே போய் விட்டேன். யோசிச்சு யோசிச்சுக் கடைசியிலே இவன் நம்புற அந்த முரட்டுத்தனத்தையே உபயோகித்துதான் இவனைத் திருத்த முடியும்னு முடிவு செய்து கொண்டு திரும்பி வந்தேன். மாணிக்கம் குறுக்கிட்டு அதை வாங்கிக்கொண்டு போய் விட்டான்' என்றான் கதிரேசன். திலகம் அவனை வியப்புடன் பார்த்தபடி, 'நேரே பார்க்காமலிருந்திருந்தால் நீங்க இவ்வளவு தைரியமுள்ளவர் என்பதை நான் கூட நம்பியிருக்க மாட்டேன். இந்த மாதிரிச் சண்டை போட எங்கே கற்றுக் கொண்டீர்கள்?' என்றாள். கதிரேசன் சிரித்துக் கொண்டே, 'என் ஆயுசிலேயே நான் சண்டை போட்டது இதுதான் முதல் தடவை. என் மனத்திலிருந்த ஆத்திரமும், எப்படியாவது நம்ம குடும்பத்தின் அமைதியைக் காப்பாற்றிக் கொண்டு விடவேண்டுமே என்ற கவலையும் சேர்ந்து எனக்குத் தெம்பு கொடுத்து விட்டன. உன் தம்பிக்காக உன் அன்பை நான் இழந்து விடக் கூடாது என்ற ஒரே பலம் எனக்குத் துணையாயிருந்து அதை இன்று சாதித்து விட்டது' என்றான்.