பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தைப்பதற்காக அவர் கொடுத்திருந்த ஒரு பழஞ்சட்டை, காகிதச் சுருளைக் கிழித்துக்கொண்டு வெளியே எட்டிப் பார்த்தது - அப்புறம், ராமு அங்கே நிற்கவில்லை! - பிள்ளை சட்டையை அவிழ்த்துக் கொடியில் மாட்டிவிட்டு, கூடத்திலிருந்த ஓர் ஒட்டை நாற்காலியில் உட்கார்ந்தார். கண்கள் திறந்தபடியே இருந்தபோதிலும், மனம் எங்கெங்கெல்லாமோ சுற்றத் தொடங்கியது. புரசைப்பாக்கத்தில் ஒரு ஜவுளிக் கடையில் குமாஸ்தாவா யிருந்தார் பூரீமான் பிள்ளை - அவருக்கு மற்றவர்கள் யாரும் மதிப்புக் கொடுப்பதில்லை. ஆகையால் நாமாவது கொஞ்சம் மதிப்புக் கொடுப்போம்! - ஆங்கிலப் படிப்புக் கிடையாது. ஆனால், வியாபாரத்துறையில் நீண்டகால அனுபவம் உண்டு. ரொம்ப நல்லவர், சாது. அனாவசியமாக யார் வம்புக்கும் போகமாட்டார். அப்படி அவர் இருந்ததுதான் அவருடைய முன்னேற்றத்துக்குத் தடையாயிருந்தது. அவருடன் முன்பு வேலை பார்த்தவர்கள் இப்போது சொந்தமாய்க் கடை வைத்துக் கொண்டு, நன்றாய்ச் சம்பாதித்து, வீடுவாசலுடன் நல்ல நிலைமையிலிருந்தார்கள். ஆனால், ரீமான் பிள்ளையோ பத்து வருஷத்துக்கு முன்பு இருந்த அதே ராமசாமிப் பிள்ளையாகவே இருந்தார் இப்போது - வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு நல்ல குணம் எதற்கு? அவருக்குச் சம்பளம் எழுபது ரூபாய். அதை வைத்து, எப்படியோ ஒரு வகையாகச் சிக்கனமாகக் காலந் தள்ளி வந்தார். அவர், வயது முதிர்ந்த தாய், அவர் மனைவி, ஒரு சிறுவன் - இதுதான் அவர் குடும்பம். வண்ணானுக்குத் துணி போடும் வழக்கம் கிடையாது. போக்கு வரத்துச் செலவும் கிடையாது. வீடு மண்ணடியிலிருந்தது. அங்கிருந்து நடந்தே போய், நடந்தே வந்து விடுவார். சினிமா, டிராமா... ஊஹாம், எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். சாப்பாடோ, பாதி நாள் ரசம் சாதம்தான்! காலந் தள்ளுவதற்கு, உயிரோடிருப்பதற்கு ரொம்ப அவசியமானதைத் தவிர வேறு எதையும் அவரோ, அவர் மனையாளோ அனுபவித்ததில்ல்ை. ஒரு நாள் இரவு அவர் தம் மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரிடத்தில் 'அமிர்தம்' என்ற சொல் வந்தது.