பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 கோடுகளாக வர்ணச் சாக்குக் கட்டியால் எழுதிக் கொண்டிருந் தான். நிமிஷங்கள் சில தேய்ந்தன. இப்பொழுது அவன் செறுமிக் கொண்டிருந்தான்; விசும்பில் ஒலி எதிரொலித்தது. ராஜேந்திரனின் கண்களின் விளிம்பில் கண்ணிர் தேங்கியது. 'பூபாலன், அதோ பாருங்கள் அந்த அதிசய மனிதரை! - கதையில் என் கற்பனையைக் கொண்டு சிருஷ்டித்தேன், பாசவெறியில் தத்தளிக்கும் ஒரு சைத்திரீகனை; அவரோ அதை உண்மையாக்கிக் கொண்டிருக்கிறார்!- பாவம், அவர் கிறுக்கும் குழந்தைச் சித்திரங்களின் அடித்தளத்திலே ஏதோ ஒரு துயரக் கதை இருக்க வேண்டும்...சரி, அந்த அதிசய மனிதரை இன்று இரவு என் வீட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்; காத்துக் கொண்டிருப்பேன்!' 冷 令 ఈ్మ• ఈ్య• விருந்து முடிந்தது. ஆசிரியர் ராஜேந்திரன் வெற்றிலைத் தட்டில் கிடந்த கிராம்பை எடுத்து உதட்டின் நுனியில் இழையச் செய்து, அதன் ரசனையில் லயித்திருந்தார். அவருடைய கண்கள் மேஜையின் மேல் கிடந்த சித்திரங்களின் மீது மொய்த்திருந்தன. 'ஆஹா, பேஷ்!’ என்றார் அவர் அடிக்கடி 'மெளலி நிஜமாகவே ஒரு பிறவிச் சித்திரக்காரர்தான்.... அவர் பெயரும் சித்திரங்களும் வெல்லும்! ..... ஆனால் பாவம், சுயபுத்தி இல்லையே, அவருக்கு?’’ விருந்தில் ஒவியர் மெளலி 'ஏதோ சாப்பிட்டேன்' என்ற சாப்பிட்டுவிட்டு எழுந்தார். மெளலியின் பக்கம் ராஜேந்திரனின் கண்ணோட்டம் ஒடியது. ஹாலில் தொங்கவிடப்பட்டிருந்த பச்சிளங் குழந்தைகளின் ஒவியங்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் மெளலி. என்ன நினைத்தாரோ, அந்தப் பேசும் பொற்சித்திரங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்துப் பார்த்து உச்சி மோந்து முத்தமாரி பொழிந்தார்; மறுகணம் பயங்கரமாகச் சிரித்தார். ஆசிரியர் கண்களைத் துடைத்துக் கொண்டு, 'பூபாலன்' 'என்று குரல் கொடுத்தார்.