பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

    • gmyfrir? " "

'மெளலியின் நிலைக்குக் காரணம் என்ன வென்று புரியவில்லையே?’’ 'அவரை முதலில் சந்தித்த இடத்தில் அவருடைய மூட்டை முடிச்சிலிருந்து கிடைத்த டைரி ஒன்று அவரைப் பற்றிய கதையைச் சொல்கிறது: மெளலியின் மனைவி ஆறுமுறை கருத்தரித்தாளாம்; அந்த ஆறு முறையும் குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்கமுடியாத நிலையில் அவை இறந்து விட்டனவாம்; அதே ஏக்கத்தில் அவருடைய மனைவியும் மாண்டுவிட்டாளாம். இந்தத் துயரம்தான் மெளலியின் சித்தம் பேதலிக்கக் காரண மாயிருந்திருக்க வேண்டும் - பாவம், பாசம் அவர் மூளையைக் | " ' கலக்கி விட்டிருக்கிறது! 4. • - o ** ** *,م குழந்தை கண்ணம்மா, பாரதியாரின் கண்ணம்மாவுக்குப் பிரதிபிம்பம். ஆசிரியரின் ஒரே குலச் சுடர், படு சுட்டி! ஒருநாள், 'அம்மா...அப்பா!' என்று அலறிற்று குழந்தை. ராஜேந்திரன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார். மெளலி, கண்ணம்மாவை எடுத்து உச்சிமோந்து கொண் டிருந்தார்; அதன் மாம்பழக் கன்னங்களில் மாறிமாறி முத்தம் பொழிந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி, எத்தனை கனவுகள், எத்தனை நிறைவுகள்! 'பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே! அள்ளி யணைத்திடவே - என் முன்னே ஆடிவரும் தேனே....!" இந்த இடத்தில் மெளலியின் பாட்டு நின்றது. 'ஆஹா இந்தக் குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் போதுமே...பசி கூடப் பறந்து விடுமே!... இதுமட்டும் எனக்குக் கிடைத்துவிடுமானால் என் பைத்தியம் சிட்டாய்ப் பறந்துவிடும்; இப்போதிருப்பதைப்போலத் தெளிந்த மனசுடன் இருப்பேன்.