பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இருந்த கண்ணம்மா இனி உங்கள் குழந்தை. ஆனால் எங்களுக் காக ஒரே ஒரு வேண்டுகோளுக்கு மட்டும் நீங்கள் இணங்கு வீர்களா? ஐந்து வருஷங்களாக எங்கள் உயிரையே வைத்துப் பேணி வளர்த்த இந்தக் குழந்தையை விட்டு ஒரு கணம்கூட என்னாலோ, என் மனைவி மீனாவாலோ பிரிந்திருக்க முடியாது. ஆகையால் தயவு செய்து நீங்களும் குழந்தையுடன் எங்கள் வீட்டிலேயே தங்குங்கள். அத்துடன் உங்கள் ஒவியங்களும் எங்கள் கலைஞன்` சஞ்சிகையை அலங்கரிக்கட்டும்.... என்ன மெளலி லார், சரியென்று சொல்லுங்கள்!' 'நிஜமாகவா? நீங்கள் சொன்னதெல்லாம் மெய்தானா? கண்ணம்மா என் குழந்தையா? அட தெய்வமே, எனக்கு ஏன் இந்தச் சோதனை!' உணர்ச்சி வசப்பட்டுவிட்ட மெளலியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. 'கண்ணம்மா, கண்ணம்மா!' என்ற பெயரை மாறிமாறி முனு முனுத்தார்.

象 冢 ఉ• * * 授 'என்ன நாடகம் அத்தான், இதெல்லாம்? நீங்கள் அந்தப் பித்துக்குளிச் சித்திரக்காரனிடம் சொன்ன கதையை நினைக்க நினைக்க என் பெற்ற வயிறு பற்றி எரிகிறதே!...கண்மணி கண்ணம்மா நம் குழந்தையாச்சே, அத்தான்!. இப்போதே அந்தப் பைத்தியத்தை வெளியே விரட்டுங்கள். ஒரு வேளை குழந்தை யைத் துக்கிக் கொண்டு ஓடினாலும் ஒடிவிடுவான். அவனைப் பார்க்கும் போதே எனக்கு அச்சமாயிருக்கிறது, அத்தான்!” என்று கணவரின் கைகளைப் பற்றியவாறு கதறினாள் மீனா. பைத்தியக்காரி, மெளலியைச் சாமானியமாக நினைக் கிறாயா? அவர் பிறவிச் சைத்திரீகர். அவரை ஆட்டிவைக்கும் பாசம் ஒருவகைப் போதை. அந்தப் பாசத்துக்கு-அந்தப் பயங்கரப் போதை வெறிக்கு ஒரு மாற்றுக் காட்டி, அவர் மனத்தைத் தெளிவு காணச் செய்துவிட்டால், அழகழகான புத்தம்புதிய உயிர்ச் சித்திரங்களை ரஸிகர் உலகம் அவரிடமிருந்து எதிர் பார்க்கலாம். அதற்குக் காலம் அவருக்கு ஆறுதல் சொல்லும் தோழனாக அமைய வேண்டும்.