பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஜம்மென்று உட்கார்ந்த கொண்டிருப்பது அய்யர்வாளுக்குத் தெரிந்தது. அவன் முகத்தில் அப்போது உண்மையில் எந்தவித மான பாவமும் இல்லை. ஆயினும் தோட்டி தன்னைப் பார்த்து நகைத்ததாக அய்யர் கற்பனை செய்துகொண்டு, அவன் மேல் ஏற்கெனவே தனக்கிருந்த கோபத்தை மேலும் கிளறி விட்டுக் கொண்டார். தன்னுடைய சிறு பிராயத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? - ஊஹால்ம் - இந்தக் காலத்தில்தான் தராதர மில்லை; கெளரவம் இல்லை - சே, உலகமே கெட்டுப் போச்சு. அபசாரம்! அபசாரம்! هجه ● o o •్మ• *్యe அன்று நடந்தே அவர் காரியாலயம் சென்றார். மாலை திரும்பும்போது ஹோட்டலுக்குள் நுழைந்து, 'சூடா ஒரு தோசை கொண்டா!' என்றார் ‘சர்வரி'டம். அதைப்பிட்டு இரண்டு வாய் விழுங்கியதும் கொஞ்சம் தண்ணிரைக் குடித்து விட்டுத் தலை நிமிர்ந்தார். எதிரே 'தோட்டி உட்கார்ந்து 'டி.பன்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என்ன அக்கிரமம்! அய்யருக்குத் துக்கி வாரிப் போட்டது. அதற்குமேல் சாப்பிடக் கூட ஒடவில்லை அவருக்கு, வயிற்றைக் குமட்டுவதுபோலிருந்தது. ஹோட்டல்காரர் பேரில் மானசீகமாக எரிந்து விழுந்தார் - யாரைச் சொல்லி என்ன பயன்? காலம் கெட்டுப்போச்சு! - அய்யர் அப்படியே கையை உதறிவிட்டு வெளியே வந்தார். முனிசிபாலிட்டியில் புகார் செய்து அவனுடைய வேலையை எப்படியாவது தொலைந்து விட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி நின்றது. அதற்காக நூறு ரூபாய் வரை செலவானால் கூடப் பாதகமில்லை என்று வேறுபட்டது - மனிதனுக்குப் பணமா பெரிது? மானம்தானே பெரிது? இந்த ஆத்திரத்துடன் வீட்டை நெருங்கிய அவருக்கு, அங்கே ஒர் ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது. அதாவது அவருடைய வீடு பூட்டிக் கிடந்தது - ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நின்றார். அதற்குள் பக்கத்து வீட்டுப் பையன் வந்து சாவியை நீட்டி, 'அம்மா சினிமாவுக்குப் போயிருக்காங்க!' என்றான்.