பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவும் உருவும் கு.ப.சேது அம்மாள் ரங்கூன் நகரத்து வானளாவிய மாடமாளிகைகளை மாலை வெய்யில் தழுவி விளையாடிக் கொண்டிருந்தது. அன்று, நானும், என் மைத்துனனும் ஒரு ஹோட்டலில் காபி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். எதிரே தெரிந்த ஒரு கட்டடத்தைக் கண்டு நான் ஸ்தம்பித்து நின்றேன். 'இது என்ன கட்டிடம்?' என்றேன் நான். 'இதுவா, இது ஒரு வாசகசாலை. இறந்து போன பெண் ஒருத்தியின் ஞாபகச் சின்னமாக ஒரு இந்தியன் இதை இங்கே எழுப்பி இருக்கிறான்! பாவம், அவனுக்கு இந்தியாவில் இடம் இல்லை போலிருக்கிறது!' என்றான் கேலிச் சிரிப்புடன். 'புரளியாக இருக்கும்!' என்று நான் அசட்டையாகச் சொன்னேன். 'புரளியல்ல. எனக்கு அந்த மனிதனைத் தெரியும். ஆனால் பரிச்சயமில்லை. இந்த ரங்கூன் நகரத்தில் அவன் ஒருவன்தான் ஷர்ட் போடாமல் வெளியே வருபவன். அதிசய மனிதன்' என்று கூறிக் கொண்டே திடீரென்று என் தோளை உலுக்கி, அதோ வருகிறானே அவன்தான்' என்று வீதியில் வரும் ஒருவனைச் சுட்டிக் காட்டினான். என் இதயத்தில் ஒரு மின்வெட்டு தெறித்து விழுந்தது போன்ற ஒர் உணர்ச்சி எழுந்தது. அவன் அந்தக் கட்டடத்தின் வாசலிலிருந்த படிகளின் வழியாக மாடிக்கு ஏறினான். எனது ஐயம் தீர்ந்தது. 'கிட்டு, ' என்று உரக்கக் கூவினேன். அவன் திரும்பி நின்றான். ஒரே ஒட்டமாக ஒடிச் சென்று அவனைத் தழுவிக் கொண்டேன். மிகவும் தணிந்த குரலில் அவன், சுந்தரம் இந்த ஒரு வாரமாக உன்னையே நினைவு படுத்திற்று மனம். வந்து விட்டாயா?” என்று கேட்டான்.